பிரச்சனைகள் இல்லாத வீட்டில் அவதரிக்கும் மகாலட்சுமி – ஆன்மிக சிந்தனை

செல்வங்கள் நிறைந்த லட்சுமி தெய்வமானவள் பிரச்சனைகள் மற்றும் சண்டை சச்சரவுகள் இல்லாத வீட்டில் தங்குவாள் என்பது மிகவும் உண்மையாகும். ஏனெனில் ஒரு பெரிய பணக்காரனாக இருந்த வியாபாரியின் வீட்டில் எந்தவித செல்வத்திற்கும் பஞ்சம் என்பது இல்லாமல் இருந்தது.
ஒரு நாள் அந்த வியாபாரியின் கனவில் மகாலட்சுமி தோன்றி, பக்தனே நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டில் தங்கியிருந்தேன்.
நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது. எனவே உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்க வேண்டும் என்ற வரத்தை மட்டும் கேட்கக் கூடாது என்று கூறினாள்.
உடனே அந்த பணக்காரன், மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்பது என்று அவரின் குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டார்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறிணார்கள். ஆனால் அந்த ஆலோசனைகள் அனைத்துமே செல்வம் தொடர்பாகவே இருந்தது.
அந்த நேரத்தில் பணக்காரனின் மகள் கூறினாள். அப்பா நாம் கடவுளிடம் பொருளாக வேண்டும் என்று வரம் கேட்டால், அந்த பொருள் நாளை நம்மை விட்டு போய் விடும்.
ஆனால் நம்மை விட்டு போகாமல் இருக்கும் சண்டைகள் இல்லாத நம் அனைவருடைய சந்தோஷம், அன்பு மகிழ்ச்சியை கேளுங்கள் என்று கூறினாள்.
அதே போல் அவனும் மகாலட்சுமியிடம் கேட்டாள்.
அதற்கு கடவுள் சண்டைகள் இல்லாத அன்பு நிறைந்த வீட்டிலேயே நன் இருப்பேன் என்பது என்னுடைய குறிக்கோள் ஆகையால் அந்த வரத்தை கேட்டு மீண்டும் உன் வீட்டில் என்னை இருக்க வைத்து விட்டாய் என்று கூறினாள்.
இதன் மூலம் சண்டைகள் இல்லாத வீட்டிலேயே லட்சுமி குடிகொள்வாள் என்பது மிகவும் உண்மையானது ஆகும்.
No comments:
Post a Comment