Sunday 26 February 2017

நமத்துப்போன ஜெயலலிதா பிறந்தநாள் விழா – நடிப்பின் இலக்கணங்கள் பிழையாகிப்போயின!?


ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது காவடி தூக்கி, மொட்டைப்போட்டு, மண்சோறு தின்று,பால் குடம் சுமந்து அப்பப்பா என்னென்ன காட்சிகள் கண்டோம்.
ஆனால் அவரின் மறைவுக்குப்பின்னர் காவடிகளும்,மண் சோறுகளும்,பால்குடங்களும் சுமக்க ஒருவரும் இல்லை. இப்போது தான் தெரிகிறது, அவர்கள் எல்லாம் நடித்தார்கள் என்பது. நடிப்பென்று முன்னரே தெரிந்தாலும் கூட  கொஞ்சமாவது விசுவாசம் இருக்கும் என்று எண்ணிய எமக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஜெயிலில் இருந்து சின்னம்மா தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருந்தாரே.அவரது கடிதத்துக்கு அவ்வளவுதான் மரியாதையா? அல்லது அவரே திட்டமிட்டு செய்த சதியா என்று சற்று யோசிக்கத் தோன்றுகிறது. ஜெயலலிதாவின் புகழ் பாடத்தொடங்கினால் இனிமேல் சசிகலா அரசியல் செய்ய முடியாது என்று அதிமுகவினர் நினைத்துவிட்டார்களோ?
தமிழக அரசு சார்பில் ஏதோ ஒப்புக்கு 69லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம். அதுவும் எத்தனை கன்றுகள் நடப்பட்டன. அவைகள் எவ்வாறு பராமரிக்கப்படும் போன்றவைகள் கேள்விக்குரியதாகவே உள்ளன.
பன்னீர்செல்வம் தரப்பினரும்,தீபா தரப்பினரும் ஆங்காங்கு சில இடங்களில் விழா நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளனர்.
மற்றபடி அதிமுக சசிகலா தரப்பினர் எந்த முன்முயற்சியும் எடுக்கவில்லை. சின்னம்மா பிறந்த நாள் விழா கொண்டாட முடிவெடுத்துள்ளார்களோ என்னவோ..?
அதிமுகவின் ஒரு பிரமாண்ட ஆளுமையையே காணாமல் செய்துவிட்டார்களே..?

No comments: