Tuesday 28 February 2017

செல்ஃபி உலகில் புது சகாப்தம்


எந்த கோணத்தில் இருந்தும், எவ்வளவு தூரத்தி்ல் இருந்தும் சரியான செல்ஃபி எடுக்க உதவும் கேமரா பொருத்தப்பட்ட சுயமாக பறக்கும் டிரோன் சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'SELFLY' என்று 
அழைக்கப்படும் தனித்திறனுடன் அமைக்கப்பட்டுள்ள விசித்திரமான பொறியை எந்த ஸ்மார்ட்போனில் வேண்டுமானில் பொருத்திக் கொள்ளலாம். இந்த SELFLY சாதனம் உங்களின் ஸ்மார்ட்போனை சுற்றியும் மறைத்து கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். அதன் பின்னர் சுதந்திரமாக உயர் மட்டத்தில் சுற்றி திரியும். அதனால் பயனர்கள் பல்வேறு கோணங்களில் இருந்து செல்ஃபியை எடுக்கலாம்.

இந்த சாதனம் $99 (£79) விலையில் தற்போது கிக்ஸ்டாரில் கிடைக்கும். செல்ஃபியை கொண்ட SELFLY சாதனம், மிக பெரிய மேலோட்ட பார்வையில் இருந்து படங்களை எடுக்க முடியும். மேலும் SELFLY மூலம் பல்வேறு அம்சங்கள் மற்றும் மிக அற்புதமான தருணங்களையும் கைப்பற்ற முடியும். இது உங்களுடைய பாக்கெட்டில் பொருந்தக்கூடிய வகையில் சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. செல்ஃபி ஸ்டிக் மற்றும் டிரான்களை பயன்படுத்தி புகைப்படம் எடுக்க விரும்பாதவர்களுக்கு இது உபயோகமானதாக இருக்கும்.

SELFLY சாதனம், ஒன்பது மில்லிமீட்டர் தடினமான உடல் கொண்டிருக்கும் மற்றும் உயர் மட்டத்தில் தன்னிச்சையாக பறந்து மிக துல்லியமாக புகைப்படம் எடுக்க ஸ்மார்ட் கேமரா தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் புதிய கோணங்களில் இருந்து அற்புதமான காட்சிகள் மற்றும் வீடியோ பதிவுகளை கைப்பற்றும்.

இந்த சாதனம் ஏற்கனவே, அதன் நிதி இலக்கை முறியடித்துள்ளது. அதாவது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட $ 125,000 (£ 99,700) இலக்கில் இருந்து, தற்போது கிட்டத்தட்ட $ 200,000 (£ 175,500) வரை அதிகரித்துள்ளது. இந்த சாதனத்தை வாங்கும் முதல் வாடிக்கையாளர்களுக்கு ஜூன் மாதத்திலிருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
THANKS: KNILA

No comments: