Tuesday 21 February 2017

பாம்பு, நரி கனவில் வருகிறதா? என்ன செய்வது? சுவாரஸ்ய செய்தி


தூக்கத்தில் கனவு வருவது நல்லது என்றும் சொல்வார்கள். கெட்டது என்றும் சொல்வார்கள். சிலர் பகல் கனவு பலிக்காது என்று கூறுவார்கள். ஆனால், கனவுகளைப்பற்றிய முழு தகவலும் நமக்கு தெரியாது.
ஆனால், சிலருக்கு கனவில் விலங்குகள் எல்லாம் வரும். அதிலும், பாம்பு மற்றும் நரி கனவில் வந்தால் என்ன நடக்கும்? நன்மைகள் நடக்குமா? அல்லது தீமைகள் ஏதும் நடக்குமா? என்ற சந்தேகம் நமக்கு இருக்கும். அதைப்பற்றிய சில விஷயங்களைப் பார்ப்போம்.
நம் காணும் கனவில் வரும், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றுக்கேற்ப பலன்களும் மாறும். என்ன வகையான விலங்குகளுக்கு என்ன மாதிரியான பலன்கள் என்பது பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.
  • புலி, சிங்கம் போன்ற வனவிலங்குகளை நாம் வேட்டையாடி வெற்றி பெறுவதுபோல் கனவு வந்தால் நமக்கு வந்த எதிர்ப்புகளை முறியடித்து நாம் வெற்றி பெறப்போகிறோம் என்று பொருள்.
  • கனவில் முயல்கள் துள்ளிக்குதித்து விளையாடுவது போல் கனவு வந்தால், நாம் சொந்த ஊருக்கு சென்று நம் உறவினர்களை சந்திக்கப் போகிறோம் அல்லது உறவினர்கள் வந்து நம்மை சந்திக்கின்றார்கள்.
  • நரி கனவில் வந்தால் சொந்த ஊரை விட்டுச் சென்று வேறு ஊரில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்குமாம்.
  • குதிரை கனவில் வந்தால், வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குதிரையின் மீது ஏறி சவாரி செய்வது போல் கனவு வந்தால் நமக்கு வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.
  • பசுக்கள் மேய்ச்சல் நிலத்தில் மேய்வது போலக் கனவுகள் வந்தால், புதிய சொத்துக்கள் வாங்குவோம்.
  • காளை மாடு துரத்துவது போல் கனவுவந்தால், வீண் பிரச்னைகள் வந்துபோகும்.
  • ஆடுகள் நம் கனவுகளில் வந்தால் புதிதாகக் காரோ, பைக்கோ வாங்கப்போகிறோம் என்று நாம் அறியலாம்.
  • பாம்பு கனவில் வந்தால், பெரிய அளவில் நமக்குத் தொல்லை தந்து வந்த கடன் பிரச்னைகள் நம்மை விட்டு விலகும்.
  • நாய்கள் குரைப்பது போல் கனவு வந்தால் வீண்பழி வந்து சேரும்.

No comments: