Tuesday 28 February 2017

ரிலையன்ஸ் ஜியோவில் இலவச வாய்ஸ் கால் பெற போர்ட் செய்வது எப்படி?

ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து வழங்கி வரும் இலவச சேவைகள் மார்ச் 31, 2017 உடன் நிறைவு பெறுகிறது. இருந்தும் ஜியோ மூலம் 
மேற்கொள்ளப்படும் வாய்ஸ் கால்ஸ் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் வாடிக்கையாளர்களுக்கு தற்சமயம் வழங்கப்பட்டுள்ள ஜியோ புத்தாண்டு சலுகையினை ஒரு வருடத்திற்கு நீட்டித்து கொள்ள புதிய ஜியோ பிரைம் எனும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் மார்ச் 31, 2017க்குள் ரூ.99க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் ஜியோ புத்தாண்டு சலுகைகள் மார்ச் 31, 2018 வரை நீட்டிக்கப்பட்டு விடும். தற்சமயம் ஜியோ சேவைகளை பயன்படுத்தி வருவோருக்கு இந்த சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு மாதம் ஒன்றிற்கு ரூ.303க்கு ரீசார்ஜ் செய்து அன்லிமிட்டெட் 4ஜி டேட்டா (நாள் ஒன்றிற்கு 1ஜிபி), அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், வீடியோ கால்ஸ், குறுந்தகவல் மற்றும் ஜியோ செயலிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியும். எனினும் ஜியோ செயலிகள் பயன்படுத்தும் போது டேட்டா தினசரி பயன்பாட்டில் இருந்தே குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மார்ச் 31, 2017க்குள் ஜியோ பிரைம் சலுகையில் முன்பதிவு செய்யாதவர்கள் ஜியோ ஏற்கனவே அறிவித்த திட்டங்களை மட்டுமே ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த திட்டங்களின் விலை ரூ.149 முதல் துவங்குகிறது. ஜியோ பிரைம் சலுகையின் கீழ் பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் சலுகையினை மேலும் ஒரு வருடத்திற்கு பயன்படுத்த முடியும். இதனால் ஜியோ பிரைம் சலுகை பலருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும்.

அவ்வாறு ஜியோ சிம் இன்னும் பெறாதவர்கள், தங்களது பழைய நம்பரை மாற்றாமல் ஜியோ சேவைகளை போர்ட் செய்வது எப்படி என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் 'PORT' என டைப் செய்து 1900 என்ர எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்ததும் உங்களுக்கு பிரத்தியேக போர்டபிலிட்டி கோடு அனுப்பப்படும் (Unique Portability Code), இது உங்கள் கோரிக்கைக்கு அடையாள எண் ஆகும்.

அடுத்து மைஜியோ செயலியை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து பார்கோடினை ஜெனரேட் செய்ய வேண்டும். கோடு பெற்றதும் அருகாமையில் இருக்கும் ரிலையன்ஸ் விற்பனை மையத்திற்கு அடையாள சான்று மற்றும் eKYC தரவுகளை எடுத்து செல்ல வேண்டும். இதன் பின் eKYC சார்ந்த வெரிபிகேஷன் செய்யப்பட்டு ஜியோ சிம் கார்டு வழங்கப்படும். இந்த சமயத்தில் உங்களது ரெபெரன்ஸ் கோடினை வழங்க வேண்டும்.

நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் டெலிகாம் நிறுவனத்தின் ஒப்புதலின் படி உங்களது போர்ட் கோரிக்கை செயல்படுத்தப்படும். இவை நிறைவுற்றதும் பழைய நம்பரில் ஜியோ சிம் கார்டினை பயன்படுத்த முடியும். இதனை உறுதி செய்யும் குறுந்தகவல் உங்களுக்கு அனுப்பப்படும்.

நன்றி: KNILA

No comments: