Thursday 23 February 2017

பூமியை போன்ற 7 புதிய கோள்கள் – நாசா விஞ்ஞானிகள் கண்டுப்பிடிப்பு!



பூமியை போலவே புதிதாக ஏழு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த ஏழு கோள்களில் மூன்று கோள்கள் மனிதர்கள் வாழ ஏற்ற இடம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒரு மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் , பூமியை போன்ற ஏழு கோள்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஏழு கோள்களில் மூன்று கோள்கள் மனிதர்கள் வாழ ஏற்ற இடமாக திகழ்வதாக நாசா கூறியுள்ளது.
இந்த 7 கோள்களும் பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும், இவை அனைத்தும் சூரியனை போன்றுள்ள ட்ராபிஸ்ட் 1 என்ற சிறிய நட்சத்திரத்தை சுற்றி வருவதாகவும் நாசா தெரிவித்துள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த 7 கோள்களில் பாறைகள் மற்றும் நீர் ஆதாரங்கள் உள்ளதால் இங்கு மனிதர்கள் வாழ முடியும் என்று நாசா கூறியுள்ளது.

No comments: