Saturday 18 February 2017

கோலட்சுமி என்று பசுவை அழைப்பதற்கான காரணம் என்ன?



இந்து சமய வழக்கப்படி புதிய வீடு கட்டி குடியேறும் பொழுது கிரகபிரவேசம் நடத்தப்படும். அப்பொழுது பசுக்களை வீட்டிற்குள் அழைத்து செல்வதுண்டு. இதன்மூலம், லட்சுமி வீட்டிற்குள் செல்கிறாள் என்று பெரியோர்கள் சொல்வதுண்டு.
இது மட்டுமல்லாது வீட்டில் சாணத்தால் மெழுகும் பொழுது லட்சுமி கடாட்சம் கிட்டும் என்பது ஐதீகம். பசுக்களை கோலட்சுமி என அழைக்க காரணம் பசுக்களின் ப்ருஷ்ட பகுதியான பின் பகுதியில் லட்சுமி இருக்கிறாள்.
பசுக்களின் பின்புறத்தில் மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு பூஜிக்கின்றனர். இதனால், தான் பசுக்களை கோலட்சுமி என அழைக்கின்றனர். மேலும், கஜ பூஜை செய்வதன் மூலம் வீட்டில் செல்வ வளம் பெருகும்.

No comments: