Thursday 23 February 2017

“வலுக்கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைக்கிறார்கள்” – என்ன செய்வது?


இளம் பெண்ணின் கேள்வி – எனக்கு 25 வயதாகின்றது. படித்து முடித்து சிறிது காலம் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றேன். ஆனால், எனக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள். நான் இன்னும் குழந்தைத்தன்மையில் தான் இருக்கின்றேன்.
நான் என்னுடைய பெற்றோர்களிடம் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. நான் ஏன் திருமணத்திற்கு பயப்படுகிறேன் என்றால், திருமணம் தொடர்பான எந்த அனுபவத்தையும் என்னுடைய பெற்றோர்கள் சொல்லித்தரவில்லை. இதனால், என்னுடைய மனம் குழப்பமாக இருக்கின்றது.
நான் உடல் ரீதியாகவும் பலஹீனப்பட்டவள். இதனால், உடல் மற்றும் மனம் மிகவும் பதற்றமாக இருக்கின்றது. வீட்டில் உள்ளவர்கள் கேட்கவும் மாட்டேங்கிறாங்க.என்ன செய்வது? நான் இதிலிருந்து தப்பிப்பது எப்படி? அல்லது மாற்றுவழி ஏதாவது சொல்லுங்கள்.
உளவியலாளரின் பதில் – உங்களுடைய வார்த்தைகளை படித்தாலே தெரிகின்றது. நீங்கள் மிகவும் மனஉளைச்சலில் இருக்கின்றீகள் என்று. திருமணத்தை பொறுத்தவரை பெண்ணுக்கும் சரி, ஆணுக்கும் சரி அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்லக்கூடிய ஒன்றாகும். பெண்ணிற்கு 25 வயது என்பது திருமணத்திற்கு பொருத்தமானதாகும்.
உங்களுக்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டால், மாப்பிள்ளை உங்கள் உறவினரோ அல்லது தெரிந்தவரோ என்றால், கொஞ்சம் கால அவகாசம் கேளுங்கள். அதற்குள், பெற்றோரிடம் மற்றும் தெரிந்தவர்களிடம் கேட்டு, திருமணம் தொடர்பான பயம் மற்றும் அனுபவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
இல்லையென்றால், உங்களுக்கு திருமணத்தைப்பற்றி வேறு ஏதும் குழப்பங்கள் இருந்தால், உளவியலாளரை நேரில் சந்தித்து விளக்கம் கேளுங்கள். அப்பொழுதுதான், திருமணத்தில் உள்ள சுவாரஸ்யமான விஷயங்கள் உங்களுக்கு புரியவரும். திருமணத்தைப்பற்றிய பயத்தை நீங்கள் தூக்கி எறியுங்கள். அதுவே, உங்களுக்கு பாதி பிரச்சனைகள் தீர்ந்த மாதிரி என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

No comments: