Thursday 23 February 2017

திருமணம் முடித்த பெண்களே; உங்களுக்கான சில உபதேசங்கள்?



திருமணம் ஆகி பெண்கள் செல்லும் கணவனுடைய வீடு ஒரு புது அனுபவம் தான். அங்குள்ள சூழல்கள், ஆட்கள், நடவடிக்கைகள் எல்லாமே வித்தியாசமாக இருக்கும்.
இதனால், பெண்கள் கணவன் வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதனைப்பற்றிய சில தகவல்களை பார்ப்போம்.
1.நீங்கள் தான் உங்கள் வீட்டின் வாசனை. கணவன் வீட்டினுள் நுழைந்த உடன் நீங்கள்தான் முதல் வாசனை என்பதை கணவருக்கு உணரச் செய்யுங்கள். நல்ல மனத்துடன் எப்போதும் இருங்கள்.
2.கணவன் ஓய்வு எடுக்கக்கூடிய இடங்களை தயார் செய்து வையுங்கள். எப்பொழுதும் அழகிய தோற்றத்தில் சுறுசுறுப்பானவராக செயல்படுங்கள்.
3.கணவனுடனான தொடர்ச்சியான கலந்துரையாடலை பேணிக் கொள்ளுங்கள். வாதம் செய்வது, தங்களது கருத்தில் பிடிவாதம் போன்றவற்றை தவிர்த்து கொள்ளுங்கள்.
4.உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை விளங்கி கொள்ளுங்கள். உங்களிடம் இயல்பாக இருக்கக்கூடிய விஷயங்களை விட்டுக் கொடுக்காதீர்கள்.
5.உங்கள் சத்தத்தை அவருக்கு முன் உயர்த்தாதீர்கள். குறிப்பாக கணவன் இருக்கும் பொழுது.
6.கணவன் கோபத்திலிருக்கும் போது, நீங்கள் அமைதியாக இருங்கள். கணவனின் திருப்தியின்றி, இரவில் உறங்க செல்ல வேண்டாம்.
7.கணவன் ஆடைகளை தேர்ந்தெடுப்பதில் உதவி செய்யுங்கள். அவருக்கு பொருத்தமான ஆடைகளை தேர்ந்தெடுத்து வழங்குங்கள்.
8.கணவனின் தேவைகளை விளங்கி கொள்வதற்கும், அவருடன் அழகிய முறையில் பழகுவதற்கும் நேரத்தை ஒதுக்குங்கள். உங்களுடைய தோற்றத்திலும் உடையிலும் கவனம் செலுத்துங்கள்.

No comments: