Wednesday 22 February 2017

ஜெயலலிதா பிறந்தநாளில் ஓ.பி.எஸ், கமல் ஒரே மேடையில்! பரபரக்கும் அரசியல்!ஆர் யூ ரெடி தமிழ்நாடே?!




பெரும்பான்மை எம்.எல்.ஏக்களை கையில் வைத்திருந்த சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிசாமி முதல்வராகிவிட்டார். அதை ஒத்துக்கொள்ள மக்களை விட திரையுலகம் தயாரில்லை.
கமல் தொடக்கத்தில் இருந்தே சசிகலா எதிர்ப்பு அரசியலை தன் பதிவுகள் மூலம் எடுத்து வைத்துள்ளார்.
ட்வீட்டர் கருத்துக்கள் மூலம் தன் நிலைப்பாட்டை அறிவித்ததோடு, ஒரு டிவி விவாதத்தில், ஓபிஎஸ்ஸையே நான் ஆதரிக்கிறேன் என்று நேரடியாக சப்போர்ட் பண்ணிணார்
கமலின் பதிவுகளுக்கு மக்களிடத்தில் பெரிய ஆதரவு. அதனால் கமல் ஒரு முடிவு எடுத்துள்ளாராம். தான் எதற்காக சசிகலா எதிர்ப்பு அரசியல் செய்கிறார்? எதற்காக ஓபிஎஸ்ஸை ஆதரிக்கிறார் எனபதை பொது மேடையில் சொல்லப்போகிறார் .
ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்தே ஓபிஎஸ்ஸுடன் தொடர்பில் இருக்கும் கமல், இன்னும் இரண்டு நாட்களில், அதாவது பிப்ரவரி 24 ஜெயலலிதா பிறந்த தினத்தின்போது, பிரமாண்ட மேடையில் ஓ.பி.எஸ்சுடன் பொது மேடை ஏறி பேசப்போகிறார்.
தமிழக அரசியலில் இது என்ன மாற்றத்தை உண்டாக போகிறதோ?

No comments: