Sunday, 12 February 2017

பன்னீர் செல்வத்தை இயக்கும் உளவு ஏஜென்ட்! அதிர்ச்சி தகவல்!


தெனாலி கமலஹாசனாக இருந்த ஓ.பி.எஸ், பாகுபலியாக அவதாரம் எடுத்ததற்கு பின்னணில் ஒரு அமைப்பும், அதன் ரகசிய ஏஜெண்டும் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சின்னம்மா, சின்னம்மா என்றவர் திடீரென என்னம்மா நீயெல்லாம் சி.எம்மா என்று கேட்க,  பின்னணியில் ஒரு தாடி வைத்த முனிவர் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஒட்டுமொத்த ஆப்ரேசனையும் பின் இருந்து இயக்கும் அந்த முனிவர்,  ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உளவு ஏஜென்டான அமர் பிரசாத் ரெட்டி என்பவர் தான் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
ஜல்லிகட்டு போராட்டம் கையை மீறி சென்றபோது, அதனை ஒடுக்க லாரண்ஸை ஒரு கருவியாக பயன்படுத்த ரெட்டி தான் உதவினாராம்.
ஆக பா.ஜ.கவின் செயல்திட்டத்தை செயல்படுத்தவே ஓ.பன்னீர் செல்வம் பொம்மையாக செயல்பட்டு வருகிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பா.ஜ.க ஆதரவு ஆட்சி அமைந்தால், பிராமணர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்குவது, கட்டாய இந்தி, அனைத்து மதத்தினரும் சடலத்தை எரிக்க வகை செய்யும் பொது சிவில் சட்டம், சமஸ்கிருத திணிப்பு, இடஒதுக்கீடு ரத்து  போன்ற பா.ஜ.கவின் அடிப்படை கொள்கைகளை செயல்படுத்த பன்னீர் செல்வம் போன்றவர் தான் தேவை என பா.ஜ.க தலைமை கருதுகிறதாம்.
இதனைச் செய்துவிட்டால் தமிழகத்தில் இரண்டாவது கட்சியாக உருவெடுத்து விடலாம் என நினைக்கிறார்களாம். கொஞ்ச நாட்களுக்கு பிறகு ஓ.பி.எஸை பா.ஜ.கவில் இணைத்து விடலாம் என கருதுகிறார்களாம்.
இந்த நடவடிக்கைகளுக்காகத் தான் பன்னீர் செல்வத்திற்கு ஆளுநர்  முழு ஆதரவு அளித்து வருகிறாராம்.
   

No comments: