Sunday, 12 February 2017

உங்கள் வீட்டிலேயே சரஸ்வதி தேவியின் ஆசியை பெறுவதற்கு ஒரு வழி?



பசந்த் பஞ்சமி பண்டிகை என்ற பருவகால திருவிழாவானது, இந்தியாவின் பல இடங்களில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படுகின்றது.
அதிலும் பஞ்சாப் பகுதியில் வாழும் இந்து மக்கள் அறிவு, இசை, கலை, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய அனைத்திலும் சரஸ்வதி தேவியின் நல்லாசி பெற வேண்டும் என்பதற்காக பெரிய அளவில் விஷேச பூஜையாக செய்வார்கள்.
எனவே பசந்த் பஞ்சமி நாளன்று தனது வீட்டில் சரஸ்வதிக்கு பூஜை செய்யும் போது, நல்ல மனதோடு வணங்கினால், சரஸ்வதியின் முழு ஆசியும் கிடைக்கும் என்று நம்புகின்றார்கள்.
  • நமது வீட்டின் பூஜை அறை மற்றும் குழந்தைகள் தூங்கும் அறைகளில் மயில் இறகை வைப்பது மிகவும் நல்லது. ஏனெனில் அது அந்த அறையில் இருக்கும் எதிர்மறையான ஆற்றலை தடுக்கிறது.
  • கல்வி, அறிவு, இசை, அறிவியல், கலை, தொழில்நுட்பம் ஆகிய அனைத்துக்கும் அதிபதியாகும் சரஸ்வதி தேவியின் வெள்ளை நிறம் கொண்ட புகைப்படத்தை வீட்டில் வைப்பது மிகவும் நல்லது.
  • சரஸ்வதி தேவிக்கு மிகவும் பிடித்த மங்கலகரமாக நினைக்கும் இசைக் கருவியான வீணையை நமது வீட்டில் வாங்கி வைக்க முடியவில்லை என்றாலும் அதனுடைய ஓவியத்தை வரைந்து வீட்டில் வைப்பதால், எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் பரந்தோடிவிடும்.
  • சரஸ்வதி அமர்ந்து இருக்கும் அதன் வாகனமாக திகழும் வாத்துவின் ஓவியத்தை நமது வீட்டு சுவர்களின் வரைந்து பெயிண்டிங் செய்து வைத்தால், அது நமது வீட்டிற்கு மிகவும் நல்லது.
  • சரஸ்வதி தேவிக்கு விஷேசமாக கொண்டாடப்படும் பசந்த் பஞ்சமி நாளன்று சரஸ்வதியின் மந்திரங்களை உச்சரித்து வந்தால், நம்மை எப்போதும் தீய சக்திகள் தீண்டாது.

No comments: