Thursday, 2 February 2017


இந்த ஸ்டைல் பிரியாணியானது வித்தியாசமான செய்முறையைக் கொண்டது. இந்த பிரியாணியை செய்வதற்கு நேரம் சற்று அதிகமானாலும், இது 
மிகவும் சுவையுடன் இருக்கும். 

தேவையான பொருட்கள் : 

பாசுமதி அரிசி - 2 1/2 கப் 
துண்டு மீன் - 1 கிலோ
வெங்காயம் - 2 
உருளைக்கிழங்கு - 2 
பட்டை - 1 
கருப்பு ஏலக்காய் - 1 
பச்சை ஏலக்காய் - 2 
கிராம்பு - 3 
பிரியாணி இலை - 3 
ஜாதிக்காய் பொடி - 1/2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 3 டேபிள் ஸ்பூன் 
பால் - 1 கப் 
குங்குமப்பூ - 1 சிட்டிகை 
உப்பு - தேவையான அளவு 
நெய் - தேவையான அளவு
சர்க்கரை - 1 ஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் 
கொத்தமல்லி - சிறிதளவு (நறுக்கியது) 
தண்ணீர் - 5 கப்

செய்முறை : 

* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

* மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக நீரில் கழுவி, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, உப்பு சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 

* அரிசியை கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். 

* பாலில் குங்குமப்பூவை போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, பட்டை, கருப்பு மற்றும் பச்சை ஏலக்காய், கிராம்பு போட்டு நன்றாக வதக்கிய பின்னர் கவி வைத்துள்ள அரிசியை போட்டு கிளறி விட வேண்டும். 

* பிறகு அதில் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து, அரிசி முக்கால் பதம் வெந்ததும், அதனை இறக்கி, ஒரு தட்டில் பரப்பி குளிர வைக்க வேண்டும். 

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு 5 நிமிடம் நன்கு வதக்கி தனியாக வைத்து கொள்ளவும்.  

* பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள மீனை போட்டு, தீயை குறைவில் வைத்து 8 நிமிடம் முன்னும் பின்னும் வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். 

* பின் அதே எண்ணெயில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி வைக்கவும்.. 

* அடுத்து அடி கனமான அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், குளிர வைத்துள்ள சாதத்தை இரண்டாக பிரித்து, அதில் ஒரு பாதியை மட்டும் வாணலியில் போட்டு, அதன் மேல் சர்க்கரை, ஜாதிக்காய் பொடி, உப்பு, 1 டேபிள் ஸ்பூன் குங்குமப்பூ பால், சிறிது வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் வறுத்த வெங்காயத்தைப் பரப்பி விட வேண்டும். 

* பின்பு அதன் மேல் மீதமுள்ள சாதம், உருளைக்கிழங்கு, வெங்காயம், குங்குமப்பூ பால் மற்றும் உப்பு ஆகியவற்றை பரப்பி, பின் அதன் மேல் மீன் துண்டுகளை வைத்து, வாணலியை மூடி, 15 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்கவும்.

* இறுதியில் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

* சூப்பரான பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி ரெடி!!!

No comments: