Monday, 13 February 2017

உங்கள் வீட்டில் பணக்கஷ்டம் தீர… இந்த கடவுளை வழிபடுங்கள்… செல்வம் கொழிக்கும்…


மனிதர்களுக்கு இருக்கக்கூடிய முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று தான் பணக்கஷ்டம். நிறைய சம்பாதிக்கின்றேன். ஆனால், கையில் இருக்கவே மாட்டேங்கிறது என்று சிலர் புலம்புவார்கள்.
எல்லா வீட்டிலேயேயும் பணக்கஷ்டம் இருக்கக்கூடிய ஒன்று தான். ஆனால், பல பேர் இதனால் மன நிம்மதியிழந்து, வாழ்க்கையை தொலைத்து வருகின்றார்கள்.
ஆனால், நாம் நம்முடைய பணக்கஷ்டத்தை கடவுளிடம் முறையிடுவதில்லை. அதற்கு உங்களுக்கு ஒரு அருமையான வழி.
நமது வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் தீர்வதற்கு, தினமும் லட்சுமி நரசிம்மர் கடவுளை வழிபட்டு, ஆதிசங்கரர் பாடிய ருண விமோசன ஸ்தோத்திரத்தை தினமும் படித்து வருவது பணக்கஷ்டத்திற்கு நல்ல தீர்வு என்று கூறப்படுகின்றது. அப்படி இல்லாவிட்டால், லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை தினமும் 108 முறைகள் கூறி வர வேண்டுமாம்.
மேலும் வாரம் தோறும் வரக்கூடிய சனிக்கிழமை அன்று லட்சுமி நரசிம்மரை 12 முறைகள் வலம் வந்து வழிபட்டு வந்தால், நமது வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம், பிரச்சனைகள் அனைத்தும், கடவுள் அருளால் விரைவில் தீர்ந்து விடும் என்று கூறப்படுகின்றது.

No comments: