எடப்பாடியை இயக்குபவர்கள் யார்? யார்? நிழல் அமைச்சர் இளங்கோ மீது பயமா? பாசமா?

அமைச்சர்களின் வாரிசுகள் அதிகார மட்டங்களாக வலம்வரும் காலத்தில் பழனிசாமியின் ஒரே மகன் விதிவிலக்கு. ‘வெகுளி’ என்ற பட்டத்தோடு உலாவருகிறார்.
ஆனால், அதற்கு எல்லாம் சேர்த்துவைத்து மாமன், மச்சான், நண்பர்கள் எனப் பலரும் அமைச்சர் பேரைச் சொல்லில் காரியம் சாதிக்கிறார்களாம்.
அமைச்சரின் மனைவி ராதா, மச்சான் வெங்கடேஷ், அண்ணன் கோவிந்தராஜூ, பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன், உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குருசாமி, வாழப்பாடி குபேந்திரன், வளத்தி வெங்கடாசலம், மாணவர் அணி மாவட்டச் செயலாளர் தமிழ்மணி, அரியானூர் பழனிசாமி, சேலம் ஜங்ஷன் பாவா, கவுன்சிலர் சசிகலா, வீராணம் முத்துசாமி, சங்ககிரி நிலவள வங்கித் தலைவர் கந்தசாமி… என அமைச்சர் ஆதரவாளர்கள் மீது புகார் பட்டியல் வாசிக்கிறார்கள் கட்சியினர்.
சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு மற்றும் மாநில மத்தியக் கூட்டுறவு சங்கங்களின் தலைவராகவும் இருக்கும் பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன்தான் அமைச்சர் இல்லாத நாட்களில், மாவட்டத்தின் நிழல் அமைச்சர்.
இவர் எங்கு போனாலும் 10 கார்கள் புடைசூழச் செல்வார். அமைச்சரின் முன்பே இவரை, ‘வாங்க மாவட்டம்’ என அழைப்பார்கள் கட்சிக்காரர்கள். அமைச்சரும் அதை ரசிக்கிறார். அமைச்சருக்கு இளங்கோவன் மீது பாசமா… பயமா எனப் பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு, இளங்கோவன் பழனிசாமியுடன் நெருக்கமாக உலா வருகிறார். ஏனென்றால், அமைச்சரின் ‘ஆல் இன் ஆல்’ தகவல்கள் அனைத்தும் அறிந்தவர் இளங்கோவன்தானாம்.
No comments:
Post a Comment