Sunday, 5 February 2017

உடல் வலுவாக வேண்டுமா



தேவையான பொருட்கள் :

சாமை அரிசி, உளுந்து - தலா கால் கப்,
பாசிப் பருப்பு - 4 மேஜைக்கரண்டி,
கரைத்து வடிகட்டிய பனை வெல்லக் கரைசல் - 1 கப்,
முதல் தேங்காய்ப்பால் - ஒரு கப்,

இரண்டாம், மூன்றாம் தேங்காய்ப்பால் - 2 கப்,
சுக்கு, ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி,
தேங்காய்த்துருவல் - 2 மேஜைக்கரண்டி.

செய்முறை :

* சாமை அரிசி, உளுந்து, பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து ரவைபோல் பொடித்து கொள்ளவும்.

* குக்கரில் பொடித்த சாமையை போட்டு அதனுடன் 2, 3-ம் தேங்காய்ப்பால், ஒரு கப் நீர் சேர்த்து, குழைய வேகவிடவும்.

* வெந்ததும் நன்கு மசித்து அதனுடன் முதல் தேங்காய்ப் பால், பனைவெல்லக் கரைசல், சுக்கு, ஏலப்பொடி, தேங்காய்த்துருவல் சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் அடிபிடிக்காமல் நன்றாக கலக்கி இறக்கவும்.

* சத்தான சாமை உளுத்தங்கஞ்சி ரெடி.

* சூடாகப் பருகினால் சுவையாக இருக்கும்.

No comments: