வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்டுவதற்கான ஒரு எளிய பரிகாரம் – வெண்கடுகு!

சாம்பிராணி தூபம் அல்லது அதிசய கம்ப்யூட்டர் சாம்பிராணி – தூபம் போடும் போது, கொஞ்சமா வெண்கடுக, அதற்குள்ள போட்ட போதும் (வேற ஏதும் செய்ய வேண்டாம்) வாசனை வெண்கடுக போட்டதுக்கப்பறம் வேற மாதிரி வரும். அந்த புகையை வீட்டில் உள்ள எல்லா இடங்களுக்கும் பரவும் படி செய்தால் போதும். வெண்கடுகு நாட்டு மருந்து கடைல கிடைக்கும்.
இதை தொடர்ந்து 3 மாதத்திற்கு அல்லது நம்ம பிரச்னை தீரும் வரை நம்பிகையுடன் (நம்பிக்கை இல்லாமல் செய்து வந்தாலும் ) செய்து வந்தால் போதும், குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவும். (குடும்பத்தில் எப்ப பார்த்தாலும் ஒருவருக்கொருவர் சத்தம் போட்டுகிட்டு, சண்டை அடிச்கிட்டு, ஒருத்தர ஒருத்தர் திட்டி கிட்டு, தேவையே இல்லாம சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் சண்டை அடிச்கிட்டு இருக்கிற சூழ்நிலை அப்படியே தலை கீழாக மாறும்.
வீட்டில் உள்ள தீய சக்தி எப்படி வெளியேறும் என்று தெரிந்து கொள்ளுங்கள். வெண்கடுகோட புகை சுட்சமமா வீட்டுக்குள்ள இருக்கற தீய சக்தியோட ( ஏவல், பில்லி சூனியம், செய்வினை, குட்டிச்சாத்தன், பேய், பிசாசு) கண்ணுல பட்ட அதால அந்த கண் எரிச்சலை தாங்கவே முடியாதாம்.
அதுக்கு (தீய சக்திகளுக்கு) ரொம்ப நேரத்துக்கு கண்ணு தெரியாம போயிடுமாம். உடனே அந்த வீட்ட விட்டு வெளியே ஓடி போய்டும், யாரை பாலோ பண்றது-னு தெரியாம குழம்பி போய்டும். எந்த வீட்டுல புகை அது கண்ணுல பட்டதோ திரும்ப அந்த வீட்டுக்குள்ள நுழையவே தயங்கும், பயப்படும்.
No comments:
Post a Comment