கான்டாக்ட் லென்ஸ் கவனம்!
உலகை உள்ளபடியே நமக்குப் பிரதிபலிக்கும் உறுப்பு, கண்கள். உலகைக் காண மட்டும் இன்றி, நம் உள்ளத்தை உலகுக்குக் காட்டவும் கண்கள்தான் சாளரம். உலகை அழகாக்கும் கண்களை அழகாக்க, இன்று விதவிதமான காஸ்மெட்டிக் லென்ஸ்கள் வந்துவிட்டன. பார்வையை மேம்படுத்த லென்ஸ்கள் பொருத்திய காலம் போய், அழகுக்காக லென்ஸ்கள் பொருத்தும் காலம் வந்துவிட்டது. கான்டாக்ட் லென்ஸ்களைப் பயன்படுத்துவது நல்லதா… இவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும்… எப்போது அதன் தேவை அவசியம் என்பது பற்றித் தெரிந்துகொள்வோம்.
எத்தனை வகைகள் உள்ளன?
பார்வைக் குறைபாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் லென்ஸ்களில் ஹார்டு, சாஃப்ட், செமி சாஃப்ட் என மூன்று வகைகள் உள்ளன. இதில், 90 சதவிகிதத்தினர் சாஃப்ட் ரக லென்ஸுகள்தான் பயன்படுத்து கின்றனர்.
ஆரம்ப காலங்களில் ஒரு வருடத்துக்குப் பயன்படுத்தக் கூடிய லென்ஸ்கள் மட்டுமே இருந்தன. தற்போது, தினமும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய டெய்லி டிஸ்போசபிள் (Daily disposable) லென்ஸ்கள், ஒரு மாதம் வரை பயன்படுத்தும் லென்ஸ்கள் எனப் பலவகைகள் வந்துவிட்டன.
காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்ஸ் எதற்கு பயன்படுகிறது?
கண்களின் அழகை மேம்படுத்த, `காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்ஸ்கள்’ பயன்படுகின்றன. கண்களின் தோற்றத்தைச் சீரமைக்க `பிராஸ் தெட்டிக் (Prosthetic) கான்டாக்ட் லென்ஸ்’ பயன் படுத்தலாம். காஸ்மெட்டிக் கான்டாக்ட் லென்ஸ்கள் பல நிறங்களில் கிடைக்கின்றன. உடைக்குத் தகுந்த நிறத்துக்கு ஏற்றபடி அவற்றைத் தேர்வுசெய்து அணியலாம். விசேஷங்களுக்குப் போகும்போதோ அல்லது வெளியே செல்லும்போதோ, கண்ணாடி அணிய விரும்பவில்லை என்றால், அதற்கு டெய்லி டிஸ்போசபிள் லென்ஸ் வாங்கிப் பயன்படுத்தலாம்.
கான்டாக்ட் லென்ஸ் யாருக்கு அவசியம்?
பார்வைக் குறைபாட்டுக்காகக் கண்ணாடி அணிவது பல வருடங்களாக நடைமுறையில் உள்ளது. கண்ணாடி அணிவதைச் சிலர் அசெளகரியமாகவும் கருதுவார்கள். அவர்கள் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தலாம்.
அதேபோல ஒருவர், மிக அதிகமான `பவர்’ கொண்ட கண்ணாடி அணியும்போது, கண்ணாடி மிகத் தடிமனாகவும் பார்வை, தெளிவு இல்லாமலும் இருக்கும். எனவே, கண்ணின் பவரானது 4-க்கும் மேல் அதிகரித்து உள்ளவர்களுக்கு கான்டாக்ட் லென்ஸ் அவசியமாகிறது.
இரண்டு கண்களும் வெவ்வேறு பவராக இருந்தால், அப்போது கான்டாக்ட் லென்ஸ் தேவை கட்டாயம். இதனை அணிவதன் மூலம் மிகத் துல்லியமான பக்கவாட்டுப் பார்வையைப் பெற முடியும்.
பக்கவிளைவுகள் உண்டா?
கான்டாக்ட் லென்ஸ்களை நாம் பார்வைத்திறன் மேம்படவும் அழகுக்காகவும் பொருத்திக்கொள்கிறோம். முறையாகப் பயன்படுத்தும்போது, எந்தப் பாதிப்போ, பக்கவிளைவுகளோ இல்லை. ஆனால், உரியமுறையில் பயன்படுத்தாவிட்டால் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
எந்த வயதில் இருந்து அணியலாம்?
இந்த லென்ஸை மூன்று மாதக் குழந்தை முதலே அணிந்துகொள்ளலாம். ஆனால், சிறு வயதினர் கையாள்வது சிரமம் என்பதால், 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் கான்டாக்ட் லென்ஸ் அணிவதே நல்லது.
கான்டாக்ட் லென்ஸ், கண்ணாடி அணியாமல் பவர் பிரச்னையை சரி செய்ய முடியாதா?
கண்ணாடி, கான்டாக்ட் லென்ஸ் ஆகிய இரண்டும் வேண்டாம் என்று கருதுகிறவர்கள், லேசர் சிகிச்சை செய்துகொள்ளலாம். இது பார்வைக் குறைபாட்டுக்கு நிரந்தத் தீர்வாக அமையும். 18 வயதுக்கு மேற்பட்டவருக்குக் கண்களின் பவரில் மாற்றம் இருக்காது. எனவே, 18 வயதுக்கு மேல் `லேசிக்’ என்னும் அறுவைசிகிச்சை செய்துகொண்டால், கண்களில் உள்ள பார்வைக் குறைவை முழுமையாகச் சரிசெய்ய இயலும். லேசிக் செய்த பின்னர், கண்ணாடி மற்றும் கான்டாக்ட் லென்ஸ் அணியத் தேவை இல்லை. தற்போது, லேசிக் சிகிச்சை முறையில் மேலும் ஒரு வளர்ச்சியாக `இன்ட்ரா லேசிக் (Intra lasik)’ முறை உள்ளது. இதில், அனைத்து சிகிச்சைகளும் மிக நுண்ணிய லேசர் கதிர்கள் மூலமாகச் செய்யப் படுகின்றன.
–
பராமரிக்கும் முறை









நன்றி
உங்களுக்காக
No comments:
Post a Comment