Tuesday 24 January 2017

முளைகட்டிய பயறு!

ட்டச்சத்துக்கள் கிரகித்தல் அதிகரிக்கிறது. குறிப்பாக, பி12, இரும்புச்சத்து, மக்னீசியம், துத்தநாகம் அதிகம் கிடைக்கிறது.
அதிகப் புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும்.
நார்ச்சத்து அதிக அளவில் கிடைக்கிறது. இதனால், செரிமானம் மேம்படுகிறது.
புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது. சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது.
தானிய ஒவ்வாமைக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
உடலுக்குத் தேவையான என்ஸைம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் கிடைக்கிறது.
உடல் எடை குறைக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
எப்படிச் சாப்பிடுவது?
பச்சையாகச் சாப்பிடுவது நல்லது.
வேகவைத்துச் சாப்பிடக்கூடாது.
எண்ணெயில் பொரித்துச் சாப்பிடக் கூடாது.
முளைகட்டிய பச்சைப் பயறை நீர் சேர்த்து அரைத்து, வெல்லம், தேன், தேங்காய்த் துருவல், உலர் திராட்சை சேர்த்து, காலை டிஃபனாகச் சாப்பிடலாம்.
முளைகட்டிய வெந்தயம்
சர்க்கரை நோயாளிகள், தினமும் ஒரு கப் சாப்பிட்டுவர, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். வயிற்றுப்புண், பெண்களின் கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப்படுதல் மற்றும் அல்சரைக் குணப்படுத்தும்.

No comments: