Tuesday 24 January 2017

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறக்கிறவர்கள் இந்த எண்ணால் ஆளப்படுகிறார்கள். சிருஷ்டியில் ஒன்றாக இருந்தது, சலனமடைந்து இரண்டாயிற்று. சலனமடைந்து உண்டானபடியால், ஜல தத்துவமாயிற்று. இதிலிருந்து உண்டானது மனம். இது சந்திரனால் ஆளப்படுகிறது. சந்திரனால் இவ்வெண் குறிக்கப்படுவதால் இவர்களைப் பற்றி பொது ஜனங்கள் பேசிய வண்ணம் இருப்பார்கள். சந்திரன் சுப பலம் பெற்று இருந்தால் நல்லவிதமாகவும் சந்திரனின் ஆதிக்கம் குறைந்து காணப்பட்டால் மாறாகவும் பேசப்படுவார்கள்.
2-ம் தேதி பிறந்தவர்கள்: அதீத கற்பனா சக்தியும், உயர்ந்த லட்சியங்களும் உடையவர் களாகவும், பயந்த சுபாவம் உடையவர்களாகவும், சாந்தமானவர்களாகவும் காணப்படுவர். மனோசக்தி மிகுந்தவர்களாதலால், தீவிரமான கற்பனைகள், ஆராய்ச்சிகள் ஆகியவற்றில் ஈடுபடுவார்கள். சமூகத்தை திருத்தி அமைப்பது பற்றிய புரட்சிகரமான எண்ணங்கள் இருக்கும். தன்னுடைய எழுத்துகளாலும் பேச்சுகளாலும் புரட்சியை உண்டாக்குவர். இவர்கள் சுலபத்தில் கோபத்துக்கு ஆட்படமாட்டார்கள்.
11-ம் தேதி பிறந்தவர்கள்: தெய்வ நம்பிக்கையும் தெய்வ அனுக்ரஹமும் உடையவர்கள். நம்பிக்கையாலேயே எந்தக் காரியத்தையும் மிக எளிதில் சாதித்துவிடுவார்கள். படிப்பு, செல்வம் முதலிய வசதிகள் இல்லாமலிருந்தும், ஆழ்ந்த நம்பிக்கையொன்றையே துணையாகக்கொண்டு மிக எளிய நிலையிலிருந்து மிக உயர்ந்த நிலையை அடைவார்கள்.
20-ம் தேதி பிறப்பவர்கள்: 
மிதமிஞ்சின கற்பனாசக்தியும், தெய்வ அனுக்ரஹமும் உடையவர்கள். உலகம் இவர்களை வழிகாட்டியாக எண்ணி வழிபடும். சுயநலமின்றி வாழ்ந்தால், மற்றவர்கள் இவரை தெய்வத்துக்கு நிகராகப் போற்றுவார்கள். சுயநலத்துடன் செயல்பட்டால் கஷ்டத்துக்கு ஆளாக நேரும். இவர்களுக்குப் பேராசை இல்லாமல் இருந்துவிட்டால், மற்றவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகக் கூடிய கண்ணியமான வாழ்க்கை அமையும்.
29-ம் தேதி பிறந்தவர்கள்: மற்றவர்களை சிரமப்படுத்துவார்கள். தேவையில்லாமல் சண்டை போடுவார்கள். மற்றவர்கள் தன்னை ஏமாற்றிவிடுவதாகக் கூறுவார்கள். இவர்களிடம் மற்றவர்கள் உதவியை எதிர்பார்க்கமுடியாது. தன்னுடைய காரியத்திலேயே குறியாக இருப்பார்கள். கெஞ்சினால் மிஞ்சுவதும், மிஞ்சினால் கெஞ்சுவதும் இவர்களுக்குக் கைவந்த கலை. குழந்தைப் பருவத்தில் இருந்தே பெற்றோர்கள் இவர்களைக் கண்காணித்து வளர்க்கவேண்டும். அப்போது இவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: 
ஒவ்வொரு மாதத்திலும் வரும் 7,16, 25 தேதிகள், 2-ம் எண் காரர்களுக்கு மிக்க அதிர்ஷ்டமான தினங்கள். எதிர்பாராதபடி அநேக நன்மைகள் ஏற்படும். செய்கிற காரியங்களிலும் தகுதிக்கு மேல் ஆதாயம் கிடைக்கும். சந்தோஷகரமான காரியங்கள் நிகழும்.
தவிர்க்கவேண்டிய தேதிகள்: இவர்களுக்கு 8,9,18,26 தேதிகள் அனுகூலம் இல்லாத நாள்கள் ஆகும். இந்நான்கு தினங்களிலும் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். மேலும் கூட்டு எண் 8 அல்லது 9 வரும் நாள்களிலும் புது முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறங்கள்: இந்த எண்ணைச் சேர்ந்தவர்களுக்கு வெளிர் பச்சை வண்ணமே மிக அதிர்ஷ்டமானது. இந்த எண் காரர்கள், தாங்கள் வசிக்கும் வீட்டின் அறைச் சுவர்கள், மற்றும் சுற்றுப்புறம் மற்றும் உடுத்தும் உடை ஆகியன வெளிர் பச்சை வண்ணத்தில் இருந்தால் உற்சாகமும் அமைதியும் உண்டாகும். கறுப்பு, சிவப்பு, ஆழ்ந்த  நீலம் ஆகிய வண்ணங்கள் தீமையை ஏற்படுத்தும் என்பதால் இந்த நிறங்களைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட ரத்தினம்
: முத்து
வழிபடவேண்டிய தெய்வம்: 
பாலசந்திர கணபதி, சிவபெருமான்
வழிபடவேண்டிய தலம்: திங்களூர்

(தொடரும்......)



No comments: