போயஸ்கார்டன் விரைந்தார் ஓபிஎஸ் சசிகலாவுடன் அவசர ஆலோசனை.. என்ன நடக்கப் போகுது?
இன்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்க உள்ள நிலையில் முதல்வர் ஓபிஎஸ் போயஸ்கார்டன் சென்றுள்ளார். அங்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்
சென்னை: போயஸ்கார்டனுக்கு சென்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுடன் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த 27ம் தேதிதான் எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது என்றாலும் அடுத்த ஒரு வாரத்திலேயே மீண்டும் எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போயஸ்கார்டன் விரைந்துள்ளார். அங்கு பொதுச் செயலாளர் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அவருடன் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, செல்லூர் ராஜு, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் உடன் சென்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலா தமிழகத்தின் முதல்வராக்குவதற்கான கோரிக்கைகள் வைக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment