நாட் ரீச்சபிளில் விந்தியா, நமீதாவுக்கு வலை விரிப்பு!
Want create site? Find Free WordPress Themes and plugins.
அதிமுகவின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களில், திரை நட்சத்திர பேச்சாளர்களில் விந்தியாவும் ஒருவர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விசுவாசியாகவே மாறிய விந்தியா பேச்சு அதிரடியாக இருக்கும்.

இந்நிலையில் இடைத்தேர்தலில் திரை நட்சத்திர பேச்சாளர்கள் யாரும் இப்போதைய அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தரவில்லை என்பது நிஜமாகி உள்ளது.
போன வாரம் அதிமுக கட்சியின் துணை பொதுச்செயலாரும் ஆர்.கே.நகர் இடை தேர்தல் வேட்பாளருமான தினகரன் கூப்பிட்டுப்பேசியபோது, சரியென்று சொன்னவர்கள் கூட, இப்போது தொகுதிக்கு பேச வரவில்லை.

நட்சத்திர பேச்சாளர்களுக்கு பெரிய டிரா பேக். தேர்தல் முடிந்தவுடன் அவர்களை யாருமே கண்டுகொள்ளாதது தான். அதை கணக்கில் கொண்டு பெரிய பணம் வழங்கப்பட்டும் கூட, வேண்டாம் என்று வாங்க மறுத்து ஓடி ஒளிகிறார்கள்.
விந்தியா ஓபிஎஸ் அணி பக்கம் சாய்ந்துவிட்டதாலோ என்னவோ, அவரின் போன் நாட் ரீச்சபிள் ஆகியிருக்கிறது. அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லையாம்.
விந்தியா ஓபிஎஸ் அணி பக்கம் சாய்ந்துவிட்டதாலோ என்னவோ, அவரின் போன் நாட் ரீச்சபிள் ஆகியிருக்கிறது. அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லையாம்.
அதனால் நமீதாவையாவது களம் இறக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்கள். ஆனால், அது எடுபடுதோ இல்லையோ, நமிதா வரணுமேன்னு தான் அதிமுகவில் டென்ஷன்.
No comments:
Post a Comment