ஜியோ பிரைம் - பாரதி ஏர்டெல், ஐடியா, வோடபோன், பிஎஸ்என்எல்: எது சிறந்தது?
ரிலையன்ஸ் ஜியோ பிரைம் ரீசார்ஜ் இருக்கட்டும், மற்ற நிறுவனங்கள் என்னென்ன சலுகைகளை வழங்குகின்றன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:
ஜியோ பிரைம் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வதற்கான கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. மொபைல் போன் பயன்படுத்தி வருபவர்களுக்கு புதிய ஜியோ திட்டங்கள் ஆறு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலையில் சில மணி நேரங்களில் இது நிறைவடைய உள்ளது.
இலவசங்கள் நிறைவு பெறுவதால் எல்லோரும் ஜியோ ரீசார்ஜ் செய்து ஏற்கனவே பயன்படுத்தி வந்த திட்டங்களை தொடரலாம் என்ற வாக்கில் ஜியோ அறிவித்து அதன் வாடிக்கையாளர்களை ரீசார்ஜ் செய்ய கேட்டு கொண்டு வருகிறது. இலவசமாக பயன்படுத்தி விட்டு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலையில் பெரும்பாலானோர் ரீசார்ஜ் செய்து வருகின்றனர்.
தற்போதிருக்கும் ஜியோ வாடிக்கையாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஜியோ சேவைகளை தொடர்ந்து பயன்படுத்த கட்டணம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் பிரைம் ரீசார்ஜ் செய்யலாமா, வேண்டாமா? மற்ற நிறுவனங்கள் வழங்கும் திட்டங்கள் என்ன என்பதை தொடர்ந்து பார்ப்போம்..,
ரிலையன்ஸ் ஜியோ பிரைம்:
ரிலையன்ஸ் ஜியோ கட்டண சேவைகளை பயன்படுத்த வாடிக்கையாளர்களுக்கு பிரைம் எனும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ரூ.99 செலுத்தினால் ஒரு வருடத்திற்கு பிரைம் திட்டத்தின் கீழ் அனைத்து ரீசார்ஜ்களிலும் பிரைம் அல்லாத வாடிக்கையாளர்களை விட அதிக டேட்டா மற்றும் சலுகைகளை பெற முடியும்.
பிரைம் திட்டத்துடன் ரூ.149 முதல் ஜியோ திட்டங்களின் விலை துவங்குகின்றன. இதே போல் ரூ.303 செலுத்தி ரீசார்ஜ் செய்யும் போது 28 நாட்களுக்கு தினமும் 1 ஜிபி வரை அதிவேக டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், எஸ்எம்எஸ் உள்ளிட்ட சேவைகளை பெற முடியும்.
ஒன்று வாங்கினால் ஒனறு இலவசம்:
ஜியோவின் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகையின் கீழ் ரூ.499 ரீசார்ஜ் செய்து 120 ஜிபி டேட்டா பெற முடியும். இதே போல் ரூ.303 ரீசார்ஜ் செய்தால் 60 ஜிபி வரை பெறலாம்.
ஏர்டெல் ரூ.345 ரீசார்ஜ்:
பாரதி ஏர்டெல் அறிவித்துள்ள ரூ.345 ரீசார்ஜ் திட்டத்தில் 28 ஜிபி டேட்டா, தினமும் 1 ஜிபி அதாவது காலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை 500 எம்பி மற்றும் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை 500 எம்பி டேட்டாவும் பயன்படுத்தலாம். மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், வழங்கப்படுகிறது. இதே போல் ரூ.549 ரீசார்ஜ் செய்தால் தினமும் 1 ஜிபி டேட்டா எந்நேரத்திலும் பயன்படுத்தலாம்.
ஏர்டெல் சர்ப்ரைஸ் ஆஃபர்:
ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு 30 ஜிபி இலவச டேட்டா மார்ச் 13-ந்தேதி முதல் வழங்கப்படுகிறது. இத்துடன் மாதம் 10 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பெற இன்றுடன் மைஏர்டெல் செயலியில் காணப்படும் ஏர்டெல் சர்ப்ரைஸ் என்ற வாசகத்தை கிளிக் செய்ய வேண்டும்.
வோடபோன் ரூ.346 ரீசார்ஜ்:
வோடபோன் அறிவித்துள்ள ரூ.346 திட்டத்தில் 28 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுகிறது. தினமும் 1 ஜிபி என்ற டேட்டா அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.339 ரீசார்ஜ்:
பிஎஸ்என்எல் அறிவித்துள்ள ரூ.339 ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 28 நாட்கள் என்பதோடு தினமும் 25 நிமிடங்களுக்கு இலவச வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுகின்றது. ரிலையன்ஸ் ஜியோ 4ஜி டேட்டா வழங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் 3ஜி அல்லது 4ஜி சார்ந்து அறிவிப்புகளை வழங்கவில்லை.
ஐடியா ரூ.348 ரீசார்ஜ்:
ஐடியா ரீசார்ஜ் மூலம் 500 எம்.பி. அதிவேக டேட்டா, அதாவது மாதம் முழுக்க 14 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகையை பயன்படுத்த 4ஜி ஸ்மார்ட்போன் வைத்திருக்க வேண்டும். அனைவருக்கும் வழங்கப்படாத இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. உங்களுக்கும் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள மை ஐடியா செயலி சென்று பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment