” யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு ” என இளையராஜாவை சாடிய எஸ்.பி.பி?!
Want create site? Find Free WordPress Themes and plugins.
காப்புரிமைக்காக பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணி இனி இளையராஜா பாடலை நான் பாடமாட்டேன் என அறிவித்தார். இளையராஜாவின் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நடிகர் கமல் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 1 மணி நேரத்திற்கு மேல் பேசி அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

தற்போது வெளிநாட்டில் எஸ்.பி.பி 50 என்ற நிகழ்ச்சியில் பாலசுப்பிரமணி கலந்து பாடி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் நடிகர் கமல் நடிப்பில்,

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த சிம்லா ஸ்பெஷல் படத்தில் இடம்பெற்ற உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா என தொடங்கும் பாடலில் ”யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு” என்ற வரியை தொடர்ந்து 2 முறை பாடியுள்ளார்.இதற்கு ரசிகர்கள் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர்.

மேலும் மேடையில் இயக்குனர் பாலசந்தர்,வைரமுத்து, எம்.எஸ்.விஸ்வநாதன் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். இளையராஜா பெயரை கூட அவர் உச்சரிக்கவில்லை. மேலும் ரசிகர்கள் ராயல்டி வாங்கி இளையராஜா பாடல்களை பாட வேண்டுமென அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment