Sunday, 22 January 2017

ராதாராஜன் பீட்டா உறுப்பினர் அல்ல : அவர் பீளா விடுகிறார், கழுவி ஊத்தும் பீட்டா


ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட ராதாராஜன், பீட்டா அமைப்பின் உறுப்பினரே இல்லை என்று பீட்டா அமைப்பு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தமிழ்நாட்டைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் ராதாராஜன் தெரிவித்தார். குறிப்பாக” இலவசமாக செக்ஸ் உறவு அளிப்பதாக அறிவித்தால் கூட மெரினாவில் கூட்டம் கூடும்.”என அவர்  பேசிய கருத்துக்கு தமிழகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனை தொடர்ந்து நேற்று காலை சென்னை பெசன்ட் நகரில் உள்ள ராதராஜனின் வீடு, ஜல்லிக்கட்டு ஆர்வலர்களால் முற்றுகையிடப்பட்டது.மேலும் அவரது செல்போன் எண்ணும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது.
இந்த நிலையில் ராதாராஜன் எங்கள் அமைப்பின் உறுப்பினரே கிடையாது என பீட்டா அமைப்பு அதிர்ச்சியளித்துள்ளது.”ராதாராஜன் பீட்டா அமைப்புக்காக பணியாற்றுபவர் கிடையாது. அவர் பீட்டா அமைப்பின் ஊழியரும் இல்லை . ராதாராஜன் எங்கள் அமைப்பின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.”என பீட்டா அமைப்பு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

No comments: