Saturday, 21 January 2017

குழந்தைகளை ஆன்மீக ரீதியானவர்களாக வளர்த்தெடுக்க வேண்டுமா?


குழந்தைகளை பெற்றோர்கள் வளர்த்தெடுக்கும் முறையில் தான் இருக்கின்றது. சிறு வயதிலேயே அவர்களை ஆன்மீக ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் வளர்த்தெடுக்கும் பொழுது தான், அவர்கள் கெட்டப்பழக்கங்களில் இருந்து விடுபட்டு இருப்பார்கள்.
ஏனென்றால், இப்பொழுது உள்ள உலகம் பகட்டான, கவர்ச்சிக்கு ஆளாகக்கூடிய சூழலில் தான் இருக்கின்றது. குழந்தைகளின் விஷயத்தில் அதிக அக்கறை எடுக்க வேண்டும். அவர்களின் ஒவ்வொரு அசைவுகளில் நெருக்கம் காட்ட வேண்டும்.
அவர்களை ஆன்மீக ரீதியான விஷயத்தில் முழுமையான ஈடுபாட்டை செலுத்துவதற்கான சில வழிமுறைகளை பார்ப்போம்.
  1. உங்கள் நம்பிக்கையில் தெளிவாக இருக்கவும் – அதாவது, நீங்கள் வணங்கக்கூடிய கடவுளின் மீது தெளிவான பார்வையுடன் இருங்கள். அப்பொழுது தான் அவர்களை நீங்கள் பயிற்றுவிக்க சரியாக இருக்கும்.
நீங்கள் மத நம்பிக்கை உள்ளவராகவும் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். உங்களுடைய பாதை, செயல், எண்ணம் பற்றிய விஷயங்களை குழந்தைகளிடம் தெளிவாக கூறி விடுங்கள்.
  1. ஆரம்பத்திலேயே கல்வியை கற்றுக் கொடுங்கள் – குழந்தைகள் பிறந்து, அவர்கள் விவரம் தெரிய ஆரம்பித்தவுடனேயே அவர்களுக்கு நல்ல விஷயங்கள், தீய விஷயங்கள் தொடர்பாக எடுத்துக்கூறி வாருங்கள்.
அண்ணன் மற்றும் தங்கை உறவு தொடர்பான நடைமுறைகளை விவரித்துச் சொல்லுங்கள்.
  1. இயற்கை சார்ந்த விஷயங்களை அறிமுகப்படுத்துங்கள் – தினமும் அவர்களை காலை நேரங்களில் இயற்கை சார்ந்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, ஆன்மீக ரீதியான சிந்தனைய ஏற்படுத்துங்கள்.
உதாரணமாக, பூங்கா மற்றும் தோட்டங்களில் சென்று அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை தொடர்பான விஷயங்களை போதிக்கலாம். குழந்தையில் சொல்லிக் கொடுக்கக்கூடிய விஷயங்கள், அவர்களின் நூறு வயதுக்கும் உதவும்.
  1. நீங்கள் இருக்கக்கூடிய பகுதிகளில் நடைபெறக்கூடிய சமூக விழாக்களில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்வது, பிறருக்கு உதவி செய்வது தொடர்பான ஆர்வங்களை ஏற்படுத்துவது போன்ற விஷயங்களை செய்யுங்கள்.
இதுவெல்லாம், உங்கள் குழந்தை முழுமையான ஆன்மீக ரீதியான குழந்தையாக வளருவதற்கு உதவும்.

No comments: