Friday 26 May 2017

கொலுசு – பெண்கள் மறைத்திருக்கும் இரசியம்


கொலுசு – பெண்கள் மறைத்திருக்கும் இரசியம்

தொன்று தொட்டு பெண்கள் நகைகளுக்கு முக்கியமாக கொடுத்து வருகின்றனர்.பெண்கள் அணியும் அணிகலன்களில், கொலுசு அணிவது மிகவும் முக்கியமான ஒன்றாகவுள்ளது.
பெண்கள் கழுத்து, காது, மூக்கு,கைகள் போன்ற உறுப்புகளில் தங்கத்தால் செய்த அணிகலன்களை அணிந்து கால்களில் மட்டும் வெள்ளியால் செய்யப்பட்ட கொலுசை போடுகிறார்கள்.
பெண்கள் கொலுசு போடுவதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளது,
• பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு உணர்ச்சிகள் அதிகமாக இருப்பதால், உணர்ச்சிகளை தன்னுடைய கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொள்ள பெண்கள் கொலுசு அணிகிறார்கள்.
• பெண்களுக்கு உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் நரம்பு வழியாக தலைக்கு ஏறுகிறது. எனவே பெண்கள் காலில் கொலுசு அணியும் போது, கொலுசானது குதிகால் நரம்பில் உரசிக் கொண்டே இருக்கும். இதனால் மூளைக்குச் செல்லும் உணர்ச்சி அலைகளை கட்டுப்படுத்துகின்றது.
• பெண்கள் கொலுசு அணிவதால், அவர்களின் இடுப்புப் பகுதியானது சமநிலைப் படுத்தப்படுகின்றது.
• குழந்தைகளுக்கு கொலுசு அணிவதால், அவர்களின் எந்த திசையில் செல்கிறார்கள் என்பதை அவர்கள் நடக்கும் போது கொலுசின் ஓசைகள் மூலம் பெரியவர்கள் கவனித்துக் கொள்வர்கள்.
• கொலுசை நாம் வெள்ளியில் செய்து போட்டுக் கொள்வதினால், கொலுசில் உள்ள வெள்ளியானது நமது ஆயுளை விருத்தி செய்யவும், உடலின் சூட்டை தனித்து குளிர்ச்சியாகவும் மாற்றுகின்றது.
• பெண்கள் காலில் அணியும் வெள்ளிக் கொலுசானது, நம் உடம்பில் ஏற்படும் நோய்த் தொற்றுகளின் பாதிப்பை தடுத்து சருமத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்கின்றது.

No comments: