Sunday 21 May 2017

வாரம் ஒரு முறை வாழை இலையில் சாப்பாடு : வாழ்க்கை பூராவும் ஆஸ்பத்திரி வேணாம்..




விநாயகர் சதுர்த்தி, வரலட்சுமி நோன்பு, வெள்ளிகிழமை பூஜைகள், கோவில் வழிபாடுகள் இப்படி வழிபாடு இடங்களில் எல்லாம் இந்த நவீன யுகத்திலும் வாழை இலையில் படையல் படைக்கிறோம்.
ஏன் தெரியுமா நண்பர்களே? கடவுளே வாழை இலையில்
 
சாப்பிட்டால் அதில் எவ்வளவு நன்மைகள் இருக்கும் என்பதை மனிதர்களுக்கு உணர்த்துவதற்கு தான்.
வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினி . உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் வல்லமை கொண்டது.

நெருப்பில் காயம் பட்டவர்களை   வாழை இலையில் கிடத்துவதை பார்த்திருப்போம். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் அற்புதமான கிருமி நாசினி.

கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால்  முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். விஷத்   தன்மை இறங்க ஆரம்பிக்கும்.

கல்யாண வீடுகளில்  வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும்  வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தவர்கள்   நமது தமிழர்கள்.

வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் அண்டுவதே இல்லை.. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். பித்தமும் தணியும்.நரம்புகள் பலப்படும்.

தாம்பத்திய உணர்வைத் தூண்டும். கல்யாணமான தம்பதிகளுக்கு மதியம்  இரவு என இரு வேளை விருந்தும் வாழை இலையில் தான் படைப்பார்கள்.

தவிர    வயிற்று  புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட  ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

No comments: