Thursday 4 May 2017

நிர்பயா மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு

நிர்பயா மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு

















புதுடெல்லி:

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி நிர்பயா என்ற மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். 6 பேர் கும்பல் அரங்கேற்றிய இந்த அதிர்ச்சி சம்பவம் நாடு முழுவதும் பெரும் போராட்டங்களுக்கு வித்திட்டது.

இதில் தொடர்புடைய ராம்சிங் என்பவர் டெல்லி சிறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மற்றொரு இளம் குற்றவாளி 3 ஆண்டு தண்டனைக்குப்பின் விடுவிக்கப்பட்டார். மீதமுள்ள 4 பேருக்கு விசாரணை கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இதை டெல்லி ஐகோர்ட்டும் கடந்த 2014-ம் ஆண்டு உறுதி செய்தது.

இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூஷன் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இதில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு வழங்குகிறது.


 நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் நாளை மதியம் 2 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறார்கள்.

No comments: