மன அழுத்தமா? துரத்துங்கள் இப்படி!
பெண்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகளைச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் சங்கீதா மது…
பாசிட்டிவ் எனர்ஜியை கடத்துங்கள்!
வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சவால், பிரச்னை இருக்கும். நாம் ஒவ்வொரு செயலையும் எதிர்சிந்தனை இல்லாமல் அணுகும்போது, நம்முடைய பாசிட்டிவ் எனர்ஜி அனைவரையும் சென்றடையும்.
திட்டமிடுதல் முக்கியம்!
வேலைக்குச் செல்லும் பெண்கள் `வீட்டையும் அலுவலகத்தையும் பேலன்ஸ் செய்ய இயலவில்லை’ என வருத்தப்பட வேண்டாம். அடுத்தகட்டமாக எந்தப் பணியை எப்படிச் செய்வது என்பதைத் திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும்.
குறை கூற வேண்டாமே!
ஒவ்வொரு நிமிடத்தையும் முழுமனதுடன், சந்தோஷமாகவும் பயனுள்ளதாகவும் செலவிட வேண்டும். `எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?’ என வருத்தப்பட்டுக்கொண்டு, மற்றவர்களைக் குறை கூறிக்கொண்டு இருப்பதில் பயனில்லை.
இலக்கை நோக்கிப் பயணியுங்கள்!
இலக்கை நோக்கிப் பயணியுங்கள்!
நம்முடைய இலக்கை சின்னச் சின்ன விஷயங்களில் இருந்து தொடங்குங்கள். எடுத்துக்காட்டாக சீக்கிரம் எழுந்திருக்கவேண்டும் என்றால், அதையே இலக்காக நினைத்து எழுந்திருக்கப்பழகுங் கள். அதைத் தொடர்ச்சியாகப் பின்பற்றுங்கள். ஓர் இலக்கை அடைந்ததும், அடுத்த இலக்கை நோக்கிப் பயணியுங்கள்.
உறவுக்கு மதிப்பு கொடுங்கள்!
உறவுக்கு மதிப்பு கொடுங்கள்!
சந்தோஷமான மன நிலையை அடைய நம் மைச் சுற்றிலும் உள்ள உறவுகள் தரும் பலம் அவசியம். அதனால் ஒவ்வொரு உறவுக்கும் மதிப்பு கொடுங்கள்; உங்களுக்கு நன்மை தருவதாக மாற்றிக் கொள்ளுங்கள்.
டைரி எழுதலாம் வாங்க!
காலையில் எழுந்ததும் நேற்று நடைபெற்ற நல்ல விஷயங்களுக்கு நன்றி தெரிவித்து டைரியில் எழுதுங்கள். தொடர்ந்து இருபது நாள்கள் செய்தால், நாம் 21-வது நாள் மகிழ்ச்சியான மன நிலைக்கு வந்துவிடலாம். வாழ்த்துகள்!
No comments:
Post a Comment