Wednesday 25 April 2018

ஆன்லைனில் எம்பிஏ படிக்கிறதால என்னென்ன நன்மைகள் தெரியுமா?



MBA என்பது உலகளவில் அங்கீகாரம் பெற்ற ஒரு படிப்பு. MBA உங்களுக்குள் இருக்கும் மேலாண்மைத் திறனை வெளிக்கொணர்கிறது. இந்தக் கல்வி மாணவர்களுக்கு முழுமையான வியாபார மேலாண்மை நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பதால், ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் இதைத் தங்கள் பணியிடங்களில் பயன்படுத்த முடிகிறது. ஆன்லைன் கல்வித்திட்டத்தில் சிறந்து விளங்கும் MIBM குளோபலில் பல்வேறு கல்வித் தேர்வுகள் உள்ளன. ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் உள்ள மேலாண்மை வகுப்புகளின் நன்மைகளை புரிந்துகொள்ள உதவும் பல கவுன்சிலர்கள் இங்கே உள்ளதால் மிகவும் எளிதாகிறது. 
 இந்த ஆன்லைன் MBA வகுப்புகள், உங்களுக்கு மேலாண்மை கருத்துகள் மற்றும் கோட்பாடுகளுக்கு அப்பால் பல விஷயங்களையும் கற்றுத் தருகின்றன. ஆன்லைன் MBA என்பது வியாபார மேலாண்மை மேற்படிப்பு ஆகும். இது கல்லூரியில் உள்ள அதே போன்ற பாடத்திட்டங்களைக் கொண்டிருக்கிறது. அதே சமயம், ஒரே இடத்தில் அமர்ந்து பாடங்களை படிக்கத் தேவையில்லை என்ற சுதந்திரத்தை அளிக்கிறது. அவரவர் வேகத்திற்கு தகுந்தாற்போல பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. சிறந்த கல்வியறிவை அளிப்பதோடு, கற்ற பின் கிடைக்கும் நல்ல சம்பளமும், இந்தப் படிப்பு முக்கியத்துவம் பெற காரணமாகிறது. இது, பொதுவாக இரண்டு வருட முழு நேர படிப்பாக இருக்கிறது. புதிதாக பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள், வியாபார உலகைப் பற்றிய ஆழ்ந்த அறிவைப் பெறுவதற்காக தேர்ந்தெடுக்கிறார்கள். பட்டதாரி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், இல்லத்தரசிகள், ஓய்வு பெற்றவர்கள், வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்கள், பணியில் இருப்பவர்கள் என எல்லோருக்கும் தேர்ந்தெடுத்துப் படிக்க ஏதுவாக இருப்பது இரண்டு வருட ஆன்லைன் எம்பிஏ படிப்பு. நுழைவுத் தேர்வு எதுவும் கிடையாது என்பதால் ஆன்லைன் பல்கலைக்கழகத்தில் சேர்வது மிகவும் எளிது.
EMBA என்பது  வியாபார மேலாண்மை நிர்வாக அதிகாரிக்கான மேற்படிப்பு ஆகும். இந்த மேற்படிப்பு, தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட விரும்பாமலும், மேற்படிப்பு படிக்க விருப்பமும் உள்ள நபர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. இதுபோன்ற பணியாளர்களுக்கு, மிகுந்த பயனளிக்கிறது ஆன்லைன் EMBA. இது அவர்களுக்கு பணியில் இருந்துகொண்டே படிப்பையும் தொடர சரியானத் தேர்வாக இருக்கிறது. EMBA படிப்பு MBA படிப்பின் அதே பாடத்திட்டத்தைக் கொண்டிருந்தாலும் வேகமாக படித்து முடிக்கும் வகையில் உள்ளது. ஆனால், EMBA, எம்பிஏ-வைக் காட்டிலும் மிகக் குறைந்த அளவு டொமைன்களையே தேர்வாக அளிக்கிறது. இந்த எக்ஸிகியூட்டிவ் எம்பிஏ பயில பணி அனுபவம் நிச்சயம் அவசியமாகிறது.
BBA படிப்பிற்கு... 
பிபிஏ படிப்பு, மாணவர்களுக்கு மேலாண்மை பிரச்னைகள் மற்றும் நிஜ வாழ்வில் வியாபாரத்தில் வரும் பிரச்னைகளைப் பற்றியும் கற்றுக்கொடுக்கிறது. ஆயினும் இது சற்று மேலோட்டமான துவக்கநிலை மட்டுமே ஆகும். ஒரு சாதுர்யமான மாணவன் உயர்கல்வியில், சிறந்த விருப்பப் பாடத்தினை தேர்வு செய்வான். எம்பிஏ போன்ற உயர்கல்வி பாடத்திட்டம், வியாபாரத்தின் நுணுக்கங்களைப் பற்றிய ஆழ்ந்த பாடத்தை நமக்குப் பயிற்றுவிக்கிறது. கற்பவர்களின் உள்ளே இருக்கும் தலைமைப் பண்பை வளர்க்கிறது. பிபிஏ படித்து முடித்த மாணவர்கள், உடனடியாக பணியில் சேர்வது அவர்களுக்கு அனுபவத்தை அளிக்கும். அந்த அனுபவம், அவர்கள் மேன்மேலும் வளர்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும். பணியில் உள்ளவர்களுக்கு, கல்லூரியில் சென்று படிப்பது மிகவும் சிரமமான ஒன்று. இந்தச் சூழ்நிலையில் ஆன்லைன் பள்ளிகள் பேருதவியாக இருக்கின்றன. பல்வேறு பாடத்திட்டங்கள், விருப்பப்பட்ட பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வசதி, படிக்கும் நேரம் ஆகிய வசதிகளை ஆன்லைன் பட்டப்படிப்புகள் அளிப்பதால், பணி செய்துகொண்டே படிப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளது. 
MIBM குளோபல், மாணவர்களுக்கு அவர்கள் விருப்பப்பட்ட நேரத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதிப்பதால், படித்துக்கொண்டே வேலை செய்ய விரும்புவர்களின் தேவையை முழுமையாகத் தீர்க்கிறது.  ஆன்லைன் எம்பிஏ பாடத்திட்டம், கல்லூரியில் சேர்ந்து படிக்கும்போது ஆகும் செலவைவிட மிகவும் குறைவாக இருப்பதால், இது மிகவும் அனுகூலமான பயனை அளிக்கிறது. மேலும் மாணவர்கள் கடன் சுமையை மனதில் கொண்டு, MIBM குளோபல் கல்விக் கட்டணத்தை பல்வேறு வழிமுறைகளில் செலுத்த வழிவகை செய்துள்ளது. கொடுக்கப்பட்ட தேர்வுரிமைகளில், பிபிஏ படிக்க, ஆன்லைன் முறையில் பல சலுகைகள் இருப்பதோடு, நேரத்தையும் மிச்சப்படுத்துவதாக இருக்கிறது. பிறகு, மேற்படிப்பையும் MIBM குளோபலில் தொடர்ந்தால், வாழ்க்கையில் முன்னேற விரும்பும் மாணவனின் 
“ஸ்மார்ட்” தேர்வாக அது இருக்கும்!

No comments: