Saturday 10 March 2018

திருச்சி மத்திய சிறை மருத்துவமனையில் இன்ஸ்பெக்டர் காமராஜ் அனுமதி

திருச்சி மத்திய சிறை மருத்துவமனையில் இன்ஸ்பெக்டர் காமராஜ் அனுமதி

















திருச்சி:

வாகன ஆய்வின் போது ஏற்பட்ட பிரச்சனையில் எட்டி உதைத்ததில் ரோட்டில் விழுந்து தலையில் காயம் அடைந்து பலியான உஷா தொடர்பான வழக்கில் இன்ஸ்பெக்டர் காமராஜ் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அவர் நேற்று காலை 7 மணிக்கு திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட் எண்.6 நீதிபதி ‌ஷகிலா முன்பு ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வருகிற 21-ந்தேதி வரை அவரை சிறைக்காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் இன்ஸ்பெக்டர் காமராஜ் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் காயம் இருந்தது. அதற்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தையல் போட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறை ஆஸ்பத்திரியில் உள்ள இன்ஸ்பெக்டர் காமராஜூக்கு மற்ற கைதிகளால் ஆபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

சிறையில் இன்ஸ்பெக்டர் காமராஜ் கண்ணீர் விட்டபடி சோகத்துடன் உள்ளார். தனது செயல் உஷாவின் உயிரை பறித்ததோடு தமிழக காவல் துறைக்கும் தன்னால் அவப்பெயர் ஏற்பட்டு விட்டதே என புலம்பியுள்ளார். அத்துடன் தனது குடும்பத்தினரின் நிலையையும் கூறி புலம்பியுள்ளார்.


உஷா கர்ப்பிணி என தெரிய வந்ததும் காமராஜூக்கு மேலும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவர் சிறையில் நேற்று வழங்கப்பட்ட உணவை சாப்பிடவில்லை. சோகத்துடன் காணப்படுகிறார். அவர் சஸ்பெண்டு செய்யப்பட்ட தகவல் சிறைக் காவலர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது.

உஷாவின் மரணம் சிறைக்கைதிகளுக்கும் தெரிந்துள்ளது. சிறையில் உள்ள ரவுடிகள் ஏற்கனவே போலீசார் மீது கோபத்தில் உள்ளனர். இன்ஸ்பெக்டர் காமராஜூக்கு சிறையில் கைதிகள், ரவுடிகளால் ஆபத்து ஏற்படக்கூடாது என் பதற்காக 24 மணி நேரமும் காமராஜ் தங்கி சிகிச்சை பெறும் சிறை ஆஸ்பத்திரியில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments: