Wednesday, 18 April 2018

சிக்கன் கீமா பிரியாணி செய்வது எப்படி

சிக்கன் கீமா பிரியாணி செய்வது எப்படி

















தேவையான பொருட்கள் 
சிக்கன் - அரை கிலோ (கொத்திய கறி)
வெங்காயம் - 1
தக்காளி - 1
கரம் மசாலாத்தூள் - 2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் விழுது - அரை தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
பட்டை - சிறிது
தயிர் - முக்கால் கப்
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
பாசுமதி அரிசி - 3 கப்
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
பிரியாணி இலை - சிறிது
உப்பு - தேவையான அளவு



செய்முறை : 

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
கொத்திய சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

பாசுமதி அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்கவும்.

சுத்தம் செய்த சிக்கனில் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து குறைந்தது 1 மணி நேரம் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து ஊற விட வேண்டும். 

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பட்டையை போட்டு தாளித்த வெங்காயத்தை போட்டு வதக்கவும். 

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் விழுது ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் ஊற வைத்துள்ள கோழிக்கறி துண்டுகளைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும். 

அதன் பின்பு மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி வதக்க வேண்டும்.

பின்பு சிறிது கரம் மசாலா, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். 

அதனுடன் ஊறவைத்துள்ள பாசுமதி அரிசியை சேர்த்து மூடி வைத்து மிதமான தீயில் வேக விட வேண்டும். 

வெந்தவுடன் இறக்கி, சிறிது நெய் விட்டுக் பரிமாறவும்..

சூப்பரான சிக்கன் கீமா பிரியாணி ரெடி.

Tuesday, 17 April 2018

தக்காளி கூட்டு செய்வது எப்படி






தக்காளி - 3,
பெரிய வெங்காயம் - 2,
தேங்காய்த்துருவல் - 50 கிராம்,
சோம்பு - 1/2 டீஸ்பூன்,
சுரைக்காய் - 1 கப்,

கறிவேப்பிலை - சிறிது,
கடலைப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் - 3,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
இஞ்சி விழுது - 1/2 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்,
பொடித்த பட்டை,
கிராம்பு - 1/2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

சுரைக்காய், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலைப்பருப்பை 3 மணி நேரம் ஊறவைத்து கொரகொரப்பாக அரைத்து, தேங்காய்த்துருவல் சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி கடுகு, சோம்பு தாளித்து, பச்சைமிளகாயை வதக்கி, இஞ்சி விழுது, மஞ்சள் தூள், கரம்மசாலாத்தூள், வெங்காயம், சுரைக்காயைச் சேர்த்து வதக்கவும். அரைத்த கலவை, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கூட்டு பதத்திற்கு வந்ததும் இறக்கி, கறிவேப்பிலையால் அலங்கரித்து சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு: பாசிப்பயறு, துவரம்பருப்பு, தட்டைப்பயறு, புடலங்காய், பீர்க்கங்காய், வாழைத்தண்டு, சௌசௌ, நீர்ப்பூசணிக்காயிலும் கூட்டு செய்யலாம்.




அவரைக்காய் கூட்டு செய்வது எப்படி




அவரைக்காய் - 1 கப்
பாசிப் பருப்பு -1/3 கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கு
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி

கடுகு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது

அரைக்க...

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 2
மிளகு - சிறிது
சீரகம் - 1/4 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 3 தேக்கரண்டி


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய், மிளகு, சீரகம், துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி வைக்கவும். இவற்றை ஜாரில் எடுத்து மசித்து வைக்கவும். குக்கரில் அவரைக்காய், பாசிப் பருப்பு எடுத்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் 3/4 கப் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு, சமைத்து வைத்துள்ள பருப்பு கலவையை ஊற்றி அரைத்து வைத்த தேங்காய் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வெந்த பின் கறிவேப்பிலை தூவி பரிமாறவும்


.


Thursday, 29 March 2018

வடகொரியா அதிபரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் - டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

வடகொரியா அதிபரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் - டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

















வாஷிங்டன்:

வடகொரியாவும், தென்கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

இதனால் கோபம் அடைந்த வடகொரியா, அமெரிக்காவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த போவதாகவும், அணுகுண்டுகளை வீசப்போவதாகவும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மிரட்டி வந்தார்.

அதற்கு பதிலடியாக வட கொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. இதன் பிறகு கிம் ஜாங் உன் சற்று இறங்கி வந்தார்.

இதற்கிடையே தென்கொரியா தூது குழு ஒன்று வடகொரியாவுக்கு சென்றது. அவர்கள் ‘கிம் ஜாங் உன்’னை சந்தித்து பேசினார்கள். அப்போது கிம் ஜாங் உன் அமெரிக்க அதிபரை சந்திக்க விரும்புவதாக கூறினார்.

இந்த வி‌ஷயத்தை தூது குழுவினர் அமெரிக்க அதிபரிடம் கூறினார்கள். அதை டிரம்ப் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் கிம் ஜாங் உன் சீனா வந்துள்ளார். அவர் சீன அதிபர் ஷி ஜின்பின்னை சந்தித்து பேசினார். அப்போது அமெரிக்காவுடன் மோதல் போக்கை கைவிடும்படி அவர் வட கொரிய அதிபரை கேட்டு கொண்டதாக தெரிகிறது.

இதுபற்றிய தகவலை சீன அதிபர் அமெரிக்க அதிபருக்கு தெரிவித்தார். அதை தொடர்ந்து டொனால்டு டிரம்ப் டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.



அதில், வடகொரிய அதிபரை சந்திப்பதற்காக நான் ஆவலுடன் காத்து இருக்கிறேன். கிம் ஜாங் உன் தன்னிடம் பேசியது பற்றி சீன அதிபர் எனக்கு தகவல் அனுப்பினார். அந்த பேச்சு நல்ல விதமாக முடிந்துள்ளது. அதை வரவேற்கிறேன்.

அதே நேரத்தில் துரதிருஷ்டவசமாக வடகொரியா மீதான தடைகள் தொடர்ந்து நீடிக்கும் என்று கூறியுள்ளார். #tamilnews

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் - களத்தில் இறங்கி பணியாற்ற ரசிகர்களுக்கு ரஜினி அழைப்பு

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் - களத்தில் இறங்கி பணியாற்ற ரசிகர்களுக்கு ரஜினி அழைப்பு

















அரசியலில் குதித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், புதிய கட்சியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கு முன்னோட்டமாக ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரையில் 26 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் தேர்வுக்கான கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குமரி, நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகிகளான ராஜூ மகாலிங்கம், சுதாகர் ஆகியோர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் ரஜினி காந்த் வீடியோ மூலமாக பேசியதாவது:-


இந்த கூட்டம் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்க தயாராகுங்கள்.

நீங்கள் அனைவரும் ஒரு எடுத்துகாட்டாக விளங்க வேண்டும். அதன் மூலமே நல்ல அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதற்காக நீங்கள் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்ற வேண்டும். பிறமாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழகத்தை பார்த்து வியக்கும் நிலையை உருவாக்க வேண்டும்.

மக்கள் மன்றத்தில் பொறுப்பு கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். உங்களை உரிய நேரத்தில் அது தேடி வரும். அதே நேரத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஒற்றுமையுடன் நாம் பணியாற்றினால் நல்லதே நடக்கும். ஆண்டவன் நம்மோடு இருக்கிறார். எல்லாவற்றிக்கும் மேலாக நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்கு மேல் நான் இருக்கிறேன். நாம் அனைவரும் சேர்ந்து செயல்படுவோம்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.


முன்னதாக மாநில நிர்வாகிகளான ராஜூ மகாலிங்கம், சுதாகர் ஆகியோர் பேசும் போது, திராவிட கட்சிகள் போல் இல்லாமல் நாம் தனித்து செயல்பட வேண்டும். அந்த கட்சிகளில் வட்டத்திற்கு ஒரு செயலாளர் நியமிக்கப்பட்டு இருப்பார்கள். ஆனால் நாம் வாக்குச்சாவடிக்கு ஒரு செயலாளரை நியமிக்க உள்ளோம் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே காஞ்சீபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ரஜினிகாந்த் ஒப்புதலுடன் கீழ்க்கண்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர்- கே.அன்பழகன், இணை செயலாளர் ஆர். வெங்க டேசன்(எ) ரஜினி பாபு, துணை செயலாளர்கள் - இ.ராஜமூர்த்தி, டி.கல்யாண குமார், வி.முருகன்.

மகளிர் அணி செயலாளர் - விஜயலட்சுமி டொமினிக் ராபர்ட், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் நவீன் குமார்.

இந்த நிர்வாகிகளுக்கு அனைத்து மன்ற உறுப்பினர் களும் முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Rajinikanth #RajinikanthPoliticalEntry

Tuesday, 20 March 2018

கணவர் பற்றிய பெண்களின் எதிர்பார்ப்புகள்

கணவர் பற்றிய பெண்களின் எதிர்பார்ப்புகள்

















பெண் தன் எதிர்காலம் குறித்தும் தன்னுடைய வாழ்க்கைத் துணை பற்றியும் அதிகம் கனவு காண்கிறாள். ஆனால், கனவுக்கும் எதார்த்தத்துக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது என்பது புரியும்போது மனம் உடைந்துபோகிறாள்.

பெண்களின் எதிர்பார்ப்புகளை சில நேரங்களில் ஆண்களால் பூர்த்தி செய்ய முடியாமல் போகும்போது, அதற்கு ஆண்கள் சொல்லும் நியாயமான காரணங்களைப் பெண்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆண் அன்பானவராக, அழகானவராக, அதிக சம்பளம் வாங்குபவராக, எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவராக இருப்பதோடு தனது எதிர்பார்ப்புகள் அனைத்தையும் உடனடியாக பூர்த்தி செய்யும் நபராக இருக்க வேண்டும். தனக்கென இடமும், நேரமும் ஒதுக்க வேண்டும். தன்னைப் பாராட்டுவதோடு, ரசிக்கவும், வர்ணிக்கவும் வேண்டுமென்று பெண்கள் எதிர்பார்ப்பதுண்டு.

இப்படி சர்வ லட்சணமும் பொருந்திய ஓர் ஆணை திருமணம் செய்துகொள்ள நினைப்பதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், எல்லா மனிதரிடத்திலும் நிறைகுறைகள் இருக்கும். ஒருவர் எல்லாவிதத்திலும் சிறந்தவராக இருப்பது சாத்தியமில்லை.



‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்பதுபோல காதலரோ, கணவரோ அவரது குறைநிறைகளுடன் ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும். எல்லா மனிதர்களுமே குறைகள் உடையவர் என்பதைப் புரிந்துகொண்டு வாழ்க்கையின் நல்ல விஷயங்களைப் பார்க்கும் Optimist மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பெரிய வேலையில் கணவர் இருந்தால், அதற்கேற்றார்போல் அலுவலகத்திலும் அவருக்கு வேலை அதிகமாகத்தான் இருக்கும். அதை புரிந்துகொள்ளாமல் ‘என்னைவிட வேலை முக்கியமா’ என்று கேட்பதால், சண்டை சச்சரவுகள்தான் மிச்சமாகும்.

கணவன், மனைவி இடையே சரியான புரிதல் இருத்தல், தன் இணையரின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வது, பொது இடத்தில் மற்றவர்கள் மத்தியில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பேசுதல், யார் தவறு செய்தாலும் தனியாக அழைத்து அதை அவருக்கு புரியும் விதத்தில் எடுத்துரைத்தல், இருபாலரும் அவர்கள் சார்ந்துள்ள குடும்பம், சமூகம் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளை புரிந்து நடத்தல் போன்றவற்றைப் பின்பற்றினால், அது மேற்சொன்ன பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவியாக இருக்கும்.

குழந்தைகளுக்கு விருப்பமான குளுகுளு கேரட் கீர்

குழந்தைகளுக்கு விருப்பமான குளுகுளு கேரட் கீர்

















தேவையான பொருட்கள் :

கேரட் - 2
பால் - அரை லிட்டர்
சர்க்கரை - ஒரு கப்
நெய் - ஒரு டீஸ்பூன்
பொடித்த முந்திரி, பாதாம் - விருப்பத்திற்கு ஏற்ப



செய்முறை :

பாலை நன்கு காய்ச்சி, சர்க்கரை சேர்த்துக் கலந்து ஆறவைக்கவும். 

கேரட்டைக் கழுவித் தோல் நீக்கிச் சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். 

குக்கரில் நெய்விட்டு, கேரட்டைச் சேர்த்து வதக்குங்கள். 

காய்ச்சிய பாலை அரை கப் எடுத்து அதில் ஊற்றி ஒரு விசில் வைத்து இறக்கவும்.. 

ஆறியதும் அதை மிக்ஸியில் போட்டு அரைத்து மீதமுள்ள பாலை கேரட்டுடன் கலந்து ஃப்ரிட்ஜில் வையுங்கள். 

குளிர்ந்தவுடன் எடுத்து பொடித்த முந்திரி, பாதாம் சேர்த்து, குடிக்கக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.

சூப்பரான கேரட் கீர் ரெடி.