Thursday, 8 June 2017

விவசாயிகள் தரமான விதைகளை கண்டறிவது வாங்குவது எப்படி?

தரமான விதைகளை கண்டறிந்து பயிரிடும் போது தான் எதிர்பார்த்த மகசூலை பெற முடியும். இதற்கு, நிர்ணயிக்கப்பட்ட சில காரணிகளை கொண்டு நடவுக்கு தேர்வு செய்யப்படும் விதைகளின் தரத்தை விவசாயிகள் கண்டறிய முடியும். சாகுபடிக்கு பிரிக்கப்படும் விதைகளில் காணப்படும் முளைப்புத்திறன், புறத்தூய்மை, இனத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் விதை நலம் என்பதே அந்த காரணிகளாகும். இந்த காரணிகளை வைத்து தான் தரமான விதைகள் என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது. இவற்றை பற்றி பார்க்கலாம்.
முளைப்புத் திறன்

விவசாயிகள் பொதுவாக அதிகம் மகசூல் தரும் முளைப்புத் திறன் கொண்ட விதைக்காரணியையே பெரிதும் விரும்புகின்றனர். இவற்றையே சார்ந்தும் உள்ளனர். ஒரு விதைக்குவியலின் முளைப்புத்திறன் 98 சதவீதமோ அல்லது அதற்கும் அதிகமானதாக இருந்தால் அந்த விதைகளின் விலை மதிப்பு அதிகமானதாக இருக்கும். ஆனால் அதே சமயத்தில் விதைப்புக்கு குறைவான எண்ணிக்கையே போதுமான விதைகளாகவும், முளைப்புத்திறன் அதிகமும் உள்ள விதைகள் அதிக மகசூலை கொடுக்கின்றன. முளைப்புத்திறனை வைத்து விதைகளின் தரத்தை நிர்ணயிப்பதால் ஒவ்வொரு விதைக்கும் அதற்கான குறிப்பிட்ட முளைப்புத் திறன் பரிந்துரைக்கப்படுகிறது. விதைகளை விற்கும் போது அந்த விதையின் குறைந்த பட்ச முளைப்பு திறனை அட்டையில் குறிப்பிட்டிருப்பார்கள். அதன்படி, நெல்லுக்கு 80 சதவீதம், மக்காச்சோளதிற்கு 80, கம்பு பயிர் 75 , கேழ்வரகு 75, பருத்தி65, எள் 80 , தக்காளி 70 , வெண்டை 65 , கத்தரி 70, மிளகாய் 60 சதவீதமும் முளைப்பு திறன் கொண்டிருக்க வேண்டும்.

புறத்தூய்மை

பொதுவாக அறுவடை செய்யப்பட்ட பின்பு அந்த விதைகளில் கல், மண் மற்றும் பிற பயிர் விதைகள் கலந்திருக்கும். இவைள் அனைத்தும் விதைகளின் புறத்தூய்மையை பாதிக்கும். எனவே விவசாயிகள் விதைகளை வாங்கும் போது அதில் குறிப்பிட்டிருக்கும் புறத்தூய்மையின் மதிப்பு அளவை பார்த்து தான் வாங்க வேண்டும். சில குறிப்பிட்ட விதைகளின் புறத்தூய்மை அளவுகளை பார்க்கலாம். நெல் என்றால் அதன் புறத்தூய்மை அளவு 98 சதவீதம் இருக்க வேண்டும். இதே போல் மக்காச்சோளத்திற்கு 98, சோளம் 98, கம்பு 98, கேழ்வரகு 97, பருத்தி 98, பயறு வகைகள் 98, நிலக்கடலை 97, எள் 97, சூரியகாந்தி 98, ஆமணக்கு 98, தக்காளி 98, வெண்டை 99, கத்தரி 98, மிளகாய் 98 சதவீதம் என்ற அளவுகளில் இருக்க வேண்டும்.

இனத்தூய்மை

விதைகளை விற்பனை செய்வதற்கு முன்பு அந்த விதைகளின் இனத்தூய்மையை ஆய்வு செய்த பின்னரே விற்பனை செய்ய வேண்டும். இனக்கலப்படம் உள்ள விதைகளால் மகசூல் பெரிதும் பாதிக்கப்படும். உதாரணமாக அதிக வாழ்நாள் கொண்ட ரக விதையும், குறுகிய வாழ்நாள் கொண்ட ரக விதையும் ஒரு விதைக்குவியலில் கலந்திருக்கலாம். இதை விதைக்கும் விவசாயிகள் திகைத்து போவார்கள். இந்த இரண்டு ரகமும் மாறுபட்ட காலங்களில் பூ பூக்கும். இதனால் ஒரே சமயத்தில் பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்படைவார்கள். எனவே, ஒரு விதைகளை வாங்கும் போது அந்த விதைகள் குறைந்த பட்ச இனத்தூய்மையை கொண்டுள்ளதா என்று சான்று அட்டையை பார்த்து வாங்க வேண்டும். ஒவ்வொரு விதைக்குரிய அதிகபட்ச பிற ரக விதைகளின் கலப்பை இங்கே பார்க்கலாம். நெல்லுக்கு ஆதாரநிலையில் ஒரு கிலோ விதையில் 10 மற்றும் சான்று நிலையில் 20 என்ற எண்ணிக்கையில் கலப்பு விதைகளின் அளவு இருக்கலாம். இதே போல் மக்காச் சோளத்திற்கு ஆதார நிலையில் 10 மற்றும் சான்று நிலையில் 20, சோளம் 10 மற்றும் 20, பயறு வகைகள் ஆதார நிலையில் கிலோவுக்கு 10 மற்றும் சான்று நிலையில் 20,எள் பயிரில் ஆதார நிலையில் 10 மற்றும் சான்று நிலையில் 20 என்ற எண்ணிக்கையிலும், கம்பு, கேழ்வரகு, பருத்தி, நிலக்கடலை, தக்காளி, கத்தரி, சூரியகாந்தி போன்றவை கலப்பு இன்றியும் இருக்க வேண்டும்.

விதை ஈரப்பதம்

விதைகளின் தரமும், சேமிப்பு தன்மையும் அந்த விதைகளின் ஈரப்பதத்தை பொறுத்தே அமைகின்றன. எனவே, விதையின் ஈரப்பதத்தில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது விதையின் தரத்தை பெரிதும் பாதிக்கிறது. விதையின் ஈரப்பதம் பயிருக்கு பயிர் மாறுகிறது. உதாரணமாக, நெல் விதைகளை 13 சதவீதம் ஈரப்பதத்திலும், கம்பு, சோளம், மக்காச்சோளம் மற்றும் தானிய விதைகளை 12 சதவீதம் ஈரப்பதத்திலும், பருத்தி, வெண்டை மற்றும் தீவனப்பயிர் விதைகளை 10 சதவீதம் ஈரப்பதத்திலும், நிலக்கடலை, சூரியகாந்தி, சணப்பு ஆகியவற்றை 9 சதவீதம் ஈரப்பதத்திலும் காற்று புகாத பைகளில் சேமிக்கலாம். 

விதை நலம்

பயிர்களில் 30 சதவீதம் நோய்கள் விதைகள் மூலம் பரவுகிறது. எனவே பரவும் நோய்களை விதைகளிலேயே கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு நோயற்ற தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் அதிகபட்ச நோய் தாக்குதல் கொண்ட விதைகளின் அளவு சட்டப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நெல் ஆதாரநிலையில் 0.01 சதவீதம் மற்றும் சான்று நிலையில் 0.05, சோளம் 0.02 மற்றும் 0.04 சதவீதம், கம்பு ஆதார நிலையில் 0.02 மற்றும் சான்று நிலையில் 0.04 சதவீதம் என்ற அளவுகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
பொதுவாக தரமான விதைகளுக்கு சான்று அட்டை வழங்கப்பட்டிருக்கும். தரமான விதைகளை பெற விவசாயிகள் சான்றட்டை கொண்ட விதைகளையே வாங்கி விதைக்க வேண்டும்.
தகவல்: கு.சிவசுப்பிரமணியம், க.சுஜாதா, ரா.கீதா, க.செல்வராணி, அ.புனிதா மற்றும் ஜெ.பத்மா.

விதை அறிவியல் மற்றும் நுட்பத் துறை, வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை.

Monday, 5 June 2017

ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை!



















நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந்துகளை தயார் செய்து, விளம்பரங்கள் வந்த வண்ணமாக உள்ளது.


இதன் மீது நாட்டம் கொண்டவர்கள் அறிந்தும், அறியாமலும் அதிகமான விலையைக் கொடுத்து வாங்கி உபயோகித்து பின் விளைவுகள், பக்க விளைவுகளினால் உடல் நலம் கெட்டு, மனம் கெட்டு விரக்தி அடைந்து விடுகின்றனர். ஆகவே, இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இளைஞர்களுக்கு வேண்டுமல்லவா? இத்தகைய வினாக்களுக்கு விடையளித்து, தெளிவுபடுத்தி தைரியப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 - 25 வயதிற்கும் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும், உறுதியுடனும் காணப்படும். பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் காம இச்சைகள் உடலில் அதிகமாக தோன்றும். இந்தச் சூழ்நிலையில் காதல் வயப்படுதல், சுய இன்ப பழக்கம், பெண்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், ஓரினச் சேர்க்கை, தூக்கத்தில் விந்து வெளியாதல் போன்றவைகளில் ஈடுபட்டு விந்துவை வெளிப்படுத்துவர்.

இது இயற்கையான ஒன்று தான். இதனால் எந்தப் பாதிப்பும் உடலுக்கு இல்லை. அதாவது வெளியான விந்துவை உடலானது மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ளும் வரை உடலுக்கு கெடுதல் இல்லை. விந்து உற்பத்தி ஆகி விந்துப் பையில் சேமித்து வைக்கப்படுகின்றது. அது நிறைந்த உடன் தாமாக வெளிப்படுத்தாவிட்டாலும் தானாக வெளியாகிவிடும். இது உடலின் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும்.

சிலர் திருமணத்திற்கு முன்னர் விந்துவை அதிகம் இழந்து விட்டதாக கருதிக் கொண்டு, தாமாகவே தமக்கு ஆண்மைக் குறைந்து விட்டது. தமக்கு குழந்தை பிறக்குமா? மனைவியை திருப்திபடுத்த முடியுமா? என்ற ஏக்கம் கவலையாக மாறிவிடுகின்றது. கவலை கொள்ளும் போது உடலில் உள்ள சுரப்பிகள் சுருங்கி, அதன் செயல் திறன் குறைந்துவிடும். இது பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதன் காரணமாக கவலை நமது ஆயுளை குறைக்கும் என்று கூறுவதுண்டு.

பயந்தவனும் கோழையும் இறந்து கொண்டே இருக்கின்றனர் என்றார் மகாத்மா காந்தி. பயம் பலத்தை கெடுக்கும் அது பிணியைத் தருவதுடன் இன்பம் அனுபவிப்பதையும் இழக்கும் படி செய்யும். ஆகவே, மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்புண்டு.

இந்த நோயினால் இருந்து மீள முறையான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தல், தேவையான மருந்துகள் எவை என்று தெரிந்து கொள்ளுதல், சக்தியான உணவை உண்ணுதல் போன்றவைகள் இந்த நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.

புகைத்தல், மது வகைகள், புகையிலை, பான்பராக் போன்றவைகளை உபயோகித்தல், டின்களில், பாட்டில்களில் வரும் பதப்படுத்தப்பட்ட இரசாயணம் கலந்த உணவுகள், பானங்கள் போன்றவைகளையும் அவ்வப் போது ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் வீரியமிக்க மாத்திரைகள், உலோகம் கலந்த மாத்திரைகள் முதலியவைகளையும் தவிர்த்தல் வேண்டும். இவைகள் உடல் உள்ளுறுப்புகளைப் பாதிக்கச் செய்கிறது.

தினமும் காலை, மாலை சுமார் 20 நிமிடம் எளிய உடற்பயிற்சிகளை அதாவது நடத்தல், குனிந்து நிமிர்தல், நீந்துதல், உட்கார்ந்து எழுதல், மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுதல், கை கால் விரல்களை நீட்டி மடக்குதல், ஜாக்கிங், ஸ்கிப்பிங், ஜம்பிங், மூச்சுப் பயிற்சி போன்றவை செய்யலாம்.

இதனால் உடல் உறுதியும், நரம்புகள், எலும்புகள் பலமும் பெறும். சாதாரண நீரை குடிக்க, குளிக்க உபயோகித்தல் நல்லது. தினமும் 7 அல்லது 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும். கோபத்தையும், கவலையையும் நீக்கி, சாந்தமான மனநிலையில் இருத்தல் நமது மொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும். 15 நாட்களுக்கொரு முறை தான் விந்துவை வெளிப்படுத்துதல் வேண்டும். அடிக்கடிக் கூடாது.

அன்று கிராமங்களில் சாதாரண நோய்கள் முதல் கொடிய நோய்கள் வரை எல்லாவற்றுக்கும் அருகில் உள்ள அரிய மூலிகைகளைக் கொண்டு பக்கவிளைவுகள் இன்றி குணப்படுத்தி வந்தனர். இந்த மூலிகைகளில் வியக்கத்தக்க வகையில் குணம் இருப்பது நாம் அறிந்த ஒன்று. இந்த மூலிகைகளால் குணமாக்க முடியாத நோய்களே இல்லை. இதனை இந்து மத முன்னோர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த மூலிகைகள் என அம்மைக்கு - வேப்பிலை, சிவனுக்கு - வில்வம், விநாயகருக்கு - அருகம்புல், விஷ்ணுவுக்கு - துளசி, பிரம்மாவுக்கு - அத்தியிலை என்று வைத்து தினசரி பூஜைகளின்போது வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக உட்கொள்ள கொடுத்து நோய் வருமுன்னர் மக்களின் பொதுவான ஆரோக்கியத்தை காத்தனர். மேலும், அவ்வப்போது வரும் நோய்களை குணப்படுத்தும் மூலிகைகளை அறிந்துள்ளார்கள்.

அவைகளில் ஆண்மைக் குறைவுக்காக, வேப்பிலை, அருகு, அத்தி, முருங்கை, ஆலயிலை, அரசஇலை, மாவிலை, அமுக்கரா, நாவல், ஓரிதழ் தாமரை போன்றவைகள் மிக பயன் உள்ளதாக உள்ளது. இக்குறைபாடு உள்ளவர்கள், இவைகளைப் பறித்து வெய்யிலில் உலர்த்தி பொடி செய்து பின் சம அளவில் ஒன்றாகக் கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பின் இதில் இருந்து இரண்டு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக உட்கொள்ள சுமார் 30 முதல் 60 நாட்களில் நல்ல பலன் தெரியும்

Sunday, 4 June 2017

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்?

ரபரப்புக்குப் பஞ்சமில்லாதது காலை வேளை. பள்ளிக்கும் அலுவலகத்துக்கும் கிளம்பும் அவசரத்தில் காலை உணவு தயாரிப்பதே பெரும்பாடு. அப்படியே தயாரித்தாலும், அதைச் சரியாகச் சாப்பிடாமல் ஓடுவதே பலரின் இயல்பு. தவிர்க்கக் கூடாதது காலை உணவு என்பதை மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அதிலும் காலை உணவில் கண்டிப்பாக ஒரு சத்தான ஆகாரமும் சேர்ந்திருக்கவேண்டியது அவசியம். அதற்கு முட்டையைச் சேர்த்துக்கொண்டால் போதும்... நம் உடலுக்கான முழு ஆற்றலுக்கும் உத்தரவாதம். முட்டை உணவுகள் எளிதில் செய்துவிடக்கூடியவை. சரி... காலை உணவில் தினமும் ஒரு முட்டை சேர்த்துக்கொண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? பார்க்கலாம்... 
ஆப்பாயில்
பலன்கள்...
      
உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை.  நிறையப் பேருக்குப் பிடித்த உணவும்கூட. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன. அவை...
புரதச்சத்து: ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.
வைட்டமின் டி: இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். 
ஆன்டிஆக்ஸிடன்ட்: இதிலிருக்கும் லூடின் (Lutein) மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும்.
 
முட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். நம் அன்றாட உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்..
முட்டை
இதய நோய் வருமா?
`முட்டை நல்ல உணவல்ல’ என்று தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (The American Heart Association - AHA) அறிவித்தது. `இதன் மஞ்சள் கருவிலிருக்கும் அதிகபட்சக் கொழுப்பால் இதய நோய்கள் வரக்கூடும்’ என்று காரணமும் சொல்லப்பட்டது. ஆனால், பிறகு வந்த ஆராய்ச்சிகளோ `அப்படி எந்த ஆபத்தும் இதனால் ஏற்படாது’ என்றன. வாரம் ஆறு முட்டைகளைச் சாப்பிடுபவர்களின் ரத்த அளவு ஒரே நிலையில்தான் இருக்கும் என்பதும் கண்டறியப்பட்டது.
எத்தனை சாப்பிடலாம்?
தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன், நமக்கு தினமும் 300 மில்லி கிராம் வரை கொழுப்புச்சத்து தேவை என்கிறது. அந்தளவில் 62 சதவிகிதம் வரை ஒரு முட்டை ஈடுகட்டுகிறது. நம் உடலுக்குக் கெட்ட கொழுப்புகளால்தான் பிரச்னை ஏற்படும். ஆனால், முட்டையிலோ நல்ல கொழுப்புகள்தான் நிறைந்துள்ளன. அதனால் எவ்விதமான கோளாறுகளும் முட்டையால் ஏற்படாது.
இதன் அளவு ஒவ்வொருவர் உடல்வாகுக்கு ஏற்ப மாறுபடும். உடல் உழைப்புள்ள நபர்களுக்கு வேறுவிதமான உணவு முறை தேவைப்படும். உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் ஒரு நாளைக்கு முட்டையின் ஆறு வெள்ளைக் கருவையும் இரண்டு மஞ்சள் கருவையும் கொண்ட உணவுகளைச் சாப்பிடலாம். இதனால் சதைகள் நன்கு வலுப்பெறும். உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் நாள் ஒன்றுக்கு ஒன்று என்ற விதத்தில் சாப்பிட்டாலே போதும். மற்ற உணவுகளில் இருந்தும் கொழுப்புச்சத்துகள் கிடைப்பதால், இதனை அவரவர் தேவைக்கேற்பதான் சாப்பிட வேண்டும்.
கரு
எச்சரிக்கை!
சர்க்கரைநோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
எதனுடன் சாப்பிடலாம்?
முட்டையுடன் கோதுமை பிரெட் மற்றும் காய்கறிகள்தான் சத்தான கூட்டணி. இறைச்சி, சீஸ், வெள்ளை பிரெட் ஆகியவற்றை இதனுடன் சாப்பிடும்போது சுவையாகத்தான் இருக்கும். ஆனால், முட்டையுடன் சாச்சுரேடட் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது சிறந்ததல்ல. இதன் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டாலே போதுமானது. மஞ்சள் கருவை நீக்கிய ஆம்லேட், அவித்த முட்டையாகவும் சாப்பிடலாம். ஆரோக்கியமான இதயத்துக்கு தரமான புரதச்சத்தும் அவசியம். எனவே, முட்டை சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். தினமும் ஒரு முட்டை, நல்ல உணவு, முறையான உடற்பயிற்சி என்று வாழ்ந்தால், மகிழ்ச்சியான வாழ்வை நிச்சயம் பெறலாம்.

"நெல் மணக்கும் திருவாரூர் திருவிழாவில் கலந்துக்கவே நான் குணமாகனும்!"- 'நெல்' ஜெயராமன்

பாரம்பர்ய நெல் ரகங்கள்

நம் முன்னோர்கள் உபயோகப்படுத்தி நம் கண்ணால் கூடக் காண முடியாத அளவுக்குப் பல நெல் ரகங்கள் வழக்கொழிந்து விட்டன. பசுமைப் புரட்சியின் கை ஓங்கியிருந்த காலத்தில் அரசு வேலையைத் துறந்து விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப் புறப்பட்டார், நம்மாழ்வார். அவருடன் சில மாதங்கள் சில இளைஞர்கள் குழுவாகப் பயிற்சி பெறுவது வழக்கம். 

அப்படித்தான் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணத்தில் நம்மாழ்வார் பின்னால் செல்லும் குழுவில் பயணித்தவர்களில் ஒருவர்தான் 'நெல்' ஜெயராமன். அப்போது நம்மாழ்வார் இவரிடம் நாட்டு ரக நெல்மணிகளைக் கொடுத்து அதன் உற்பத்தியைப் பெருக்குமாறும், பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்குமாறும் சொல்லியிருக்கிறார். 

நம்மாழ்வார் சொன்னது போலவே திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், ஆதிரெங்கம் கிராமத்தில் தேசிய அளவிலான நெல் திருவிழா 2006-ம் ஆண்டு முதல் ஒவ்வொர் ஆண்டும் நடத்தி வருகிறார். நெல் ஜெயராமன் நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய ரகங்களை மீட்டிருக்கிறார். பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டதாலேயே இவர் 'நெல்' ஜெயராமன் என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டார். 

ஆனால் இவர் கடந்த சில மாதங்களாகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன் என்று சொல்லிவிட்டுச் சென்றவர், அதே தெம்போடு குணமடைந்து வருகிறார். இப்போது அடுத்த நெல் திருவிழாவிற்கான தேதிகளையும் அறிவித்திருக்கிறார், ஜெயராமன்.

பாரம்பர்ய ரகங்கள்
இதுபற்றி 'நெல்' ஜெயராமனிடம் பேசினோம். "நீண்ட மருத்துவ சிகிச்சைகளுக்குப் பின்னர் மீண்டும் பிறந்ததுபோல இருக்கிறது. விவசாயிகள் செயற்கை விவசாயத்தால் படும் கஷ்டம் அளவில்லாதது. இதுதவிர, பாரம்பர்ய நெல் ரகங்களை நம்பி பெரும்பாலான விவசாயிகள் விவசாயம் செய்ய மறுக்கிறார்கள். 

2006-ம் ஆண்டு நம்மாழ்வார் ஐயாவால் துவக்கி வைக்கப்பட்ட நெல் திருவிழா, இம்முறை வரும் 17, 18 ஆகிய தேதிகளில் 11-வது ஆண்டாக நடைபெறவுள்ளது. இந்த நெல் திருவிழாவை நடத்துவதற்காகவே வேகமாக குணமடைந்து வருகிறேன். திருத்துறைப்பூண்டி டி.வி.ஆர் சாலையிலுள்ள ஏ.ஆர்.வி - தனலெட்சுமி திருமண அரங்கத்தில் நடைபெறுகிறது. இத்திருவிழாவில், பாரம்பர்ய உணவு மற்றும் கருத்தரங்கம் ஆகிய நிகழ்வுகளும் உண்டு. 


ஜெயராமன்
























இந்த விழாவில் 156 வகையான பாரம்பரிய நெல் 6000 விவசாயிகளுக்குத் தலா 2-கிலோ வீதம் வழங்கப்படவுள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் அதிகளவில் விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் தமிழக அரசின் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி ஐ.ஏ.எஸ், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் மதுமதி ஐ.ஏ.எஸ், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் ஐ,.ஏ.எஸ், மலேசியா பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் சுப்பாராவ், நமது நெல்லைக் காப்போம் தேசிய ஒருங்கிணைப்பாளர் உஷாகுமாரி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக அங்கக வேளாண்மைத்துறை பேராசிரியர் முனைவர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். 

தமிழ்நாடு வேளாண்மைத்துறை முதன்மை அதிகாரிகள், நபார்டு வங்கி முதன்மை அதிகாரிகள், தஞ்சாவூர் இந்திய உணவு பதனிடும் கழக ஆராய்ச்சியாளர்கள், புதுவாழ்வுத் திட்ட அதிகாரிகள், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, மேற்கு வங்களாம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வேளாண் வல்லுநர்கள் பங்கேற்கிறார்கள். விழாவின் கருத்தரங்கில் பாரம்பர்ய நெல் சாகுபடி அதன் மருத்துவக் குணங்கள், இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், விளை நிலங்கள், நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு, 

உழவர்களுக்கான நபார்டு திட்டங்கள், பருவநிலை மாற்றமும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களும், விற்பனை வாய்ப்பும் சந்தை நிலவரம் மற்றும் நம்மாழ்வார் விருது வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும்" என்றார்.

Friday, 2 June 2017

இனி விவசாயிகள் மாடுகள் வளர்க்க கூடாது..! ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தடை: ஒரு அதிர்ச்சி தகவல்!



மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தின்படி யாரும் இனி மாடு, காளை, ஒட்ட‌க‌ம் போன்ற‌ கால்நடைகளை உண‌வுக்கு விற்பதற்காக சந்தைக்கு கொண்டு வரக்கூடாது.
அப்ப‌டி கொண்டுவ‌ருவ‌தானால்..கால்நடைகளை விற்பவர் கால்நடை சம்பந்தமான ஆவணங்களில் 5 நகல்கள் வைத்திருக்க வேண்டும்.
முதல் நகல் வாங்குபவரிடமும், 2வது நகல் விற்பவரிடமும், 3வது நகல் வாங்குபவர் குடியிருக்கும் பகுதியின் தாசில்தாரிடமும், 4வது நகல் தலைமை கால்நடை அதிகாரியிடமும், 5வது நகல் கால்நடை விற்பனை கமிட்டியிடம் இருக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதிகளாக்கி மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இவ்வளவு “ந‌டைமுறை சாத்திய‌ம‌ற்ற‌” விதிகளும் எதற்காக? மாடுகளைக் காப்பாற்றுவதற்காகவா?
இல்லை..!. ஒருவரும் நாட்டு மாடுகளை வளர்க்காமல் போகட்டும் என்பதற்காகவே..!
இவ்வளவுக் கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்த பின்னர், இனி எந்த விவசாயியாவது மாடுகளைத் தங்கள் வீடுகளில் வளர்க்கப் பிரியப்படுவார்களா என்ன..?
த‌ன‌க்கும் த‌ன் குடும்ப‌த்துக்குமே உண‌வுக்கு ப‌ற்றாக்குறை இருக்கையில், வ‌ய‌தான‌, உழ‌வுக்கு ப‌ய‌ன‌ற்ற மாட்டுக்கு அவ‌ன் எப்ப‌டி உண‌வ‌ளிப்பான்…? வ‌ய‌தான‌ மாடுக‌ளை விற்கக்கூட‌ முடியாது.
சரி, அப்ப‌டி இந்த‌ அரசுக்கு இவன் மீது என்ன கோபம்? இங்குதான் #ச‌ர்வ‌தேச‌பொருளாதார‌அர‌சிய‌ல் விளையாடுகிற‌து…!
நாட்டுப் பசுக்களை இனி ஒருவனும் வளர்க்கவே ஆசைப்படக்கூடாது.அதற்காகத்தான் இவ்வளவு கட்டுப்பாடுகள்..!
நாளடைவில் நாட்டுப் பசுக்கள் எல்லாம் ஒழிந்து போய், பாலுக்காக வெளிநாட்டுப் பசுக்களான ஜெர்சி இனப் பசுக்களையே நாம் சார்ந்திருக்க வேண்டும்.
1.4 பில்லிய‌ன் ம‌க்க‌ள்தொகை கொண்ட‌ இந்த தேசத்தில் (உணவு, தேநீர், இனிப்பு வகைகள், வெண்ணெய், நெய், தயிர் போன்றவைகளுக்காக) 100 கோடி லிட்டர் பால் தேவை என்று குறைந்த‌ப‌ட்ச‌ம் கணக்கிடுங்கள்.மாதத்திற்கு 3,000 கோடி லிட்டர் பால் தேவைப்ப‌டும்.
ஒரு லிட்டர் பால் 40 ரூபாய் என்றால்கூட‌,மாதத்திற்கு 1,20,000 கோடி ரூபாய் பால் வணிகம்.
அப்படியானால் “வருஷத்துக்கு 14,40,000 கோடி ரூபாய்” வணிகம்..! – இதுதான் அவ‌ர்க‌ள் நோக்க‌ம்.
இதைக் குறி வைத்துதான் அந்நிய சக்திகள் களம் இறங்குகின்றன. அவர்கள் வியாபாரம் இங்கு கொழிக்க வேண்டும். அதற்கு இந்த‌ கார்ப்ப‌ரேட் கைக்கூலி அர‌சு சோர‌ம் போகிற‌து.
ஜெர்சி இன ப‌சுவின் விந்துக்களுக்குக்கூட அவர்கள் காபிரைட் வாங்கி வைத்திருக்கின்றார்கள்.
நம் விருப்பம் போல் அந்த மாடுகளை நாம் இனவிருத்தி செய்து வளர்த்துவிட முடியாது. காசு கொடுத்துதான் அதன் விந்துவைக்கூட வாங்க முடியும்.
பல ஆண்டுகள் கழித்து இந்த தேசம் அதை உணர்ந்து, திருந்தி வரப் பார்க்கும் போது…. மோடியும் இருக்க மாட்டார்.. நாட்டு மாடுகளும் நாட்டில் இருக்காது.
அதன் பிறகு அவன் வைத்ததுதான் இங்கு சட்டம். விவ‌சாய‌த்தோடு சேர்ந்து ஒரு தேச‌த்தின் பெரும் ம‌க்க‌ள் தொகையே அழிந்துவிடும்.
த‌‌ய‌வுசெய்து சிந்தித்து செய‌ல்ப‌டுங்க‌ள். இது வெறும் சிறுபான்மை ம‌ற்றும் த‌லித்துக‌ள் மீதான‌ போர‌ல்ல‌..!
“இது வெறும் ம‌த உணர்வு சார்ந்த‌ விஷ‌ய‌ம‌ல்ல‌.. ஒட்டுமொத்த‌ இந்திய விவ‌சாய‌த்தின் எதிர்கால‌ம்”என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..!
ஒரு விஷயம் இங்கு தெளிவாக உணர்த்துகிறது. இனி விவசாயிகள் யாரும் மாடு வளர்க்க கூடாது என்றும் ஜல்லிக்கட்டிற்கும் நிரந்தரத் தடை என்றும்  நேரிடையாகச் சொல்லாமல் மாடே வளர்க்க  முடியாத நிலைக்கு மதிய அரசு செய்து விட்டது என்கிறார்கள் இயற்களை ஆர்வலர்கள்.
உண்மைதான் பகீர் என்று இருக்கிறது.

தப்பு கண்டுபிடிச்சா.. 25 லட்சம் பரிசாம்! அசத்திய இந்திய மாணவி!




அமெரிக்காவில் 6 வயது முதல் 15 வயதுடையோருக்கான சொற்களில் உள்ள எழுத்து பிழையை கண்டுபிடிக்கும் போட்டி நடந்தது.
இந்த போட்டியில் பல்வேறு மாகாணங்களிலிருந்து 10 லட்சம் பேர் கலந்து கொண்டனர். அதில் இந்திய வம்சாவளியை சார்ந்த அனன்யா வினய் என்ற 12 வயது சிறுமி முதலிடத்தை பிடித்துள்ளார்.
இவர் ‘Marocain’ (பட்டு அல்லது கம்பளியால் செய்யப்பட்ட துணி) என்ற வார்த்தைக்கு எழுத்து பிழை கண்டு பிடித்து, சரியான சொல்லை கூறி முதலிடம் பிடித்தார். இவருக்கு $40,000 (ரூ. 25.79 லட்சம்) பரிசு வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் ஒவ்வொரு வருடமும் அமெரிக்கர்களை விட இந்தியர்கள் தான் அதிக அளவில் வென்று வருகின்றனர். அமெரிக்கர்களின் தாய்மொழி ஆங்கிலமாக இருந்தாலும் இந்த போட்டியில் இந்தியர்களைவிட பின்தங்கியே உள்ளனர்.

அழகான பெண் ஊழியர்! விழுந்த தொழிலதிபர்! பயங்கர சிக்கலில் மாட்டினார்!



சென்னை பெரம்பூர் நெடுஞ்சாலையில் டயர்களை விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது.
இங்கு வேலை செய்யும் இளம்பெண் மிகவும் அழகானவர். அவரது அழகில் விழுந்து விட்டார் அந்த நிறுவனத்தின் அதிபர். ஆனால் அந்த இளம்பெண்ணிற்கு ஏற்கனவே ஒரு காதலன் இருந்துள்ளார்.
அவர் அடிக்கடி நிறுவனத்திற்கு வந்து இவரை பார்த்துள்ளார். அப்போது, தொழில் அதிபர் தனது காதலியை நோட்டமிடுவதை கவனித்தார். மேலும் தன்னிடம் தவறாக அந்த தொழிலதிபர் பழகி வருவதாக தனது காதலனிடம் அந்த பெண் கூறியுள்ளார். இதனை வைத்து இருவரும் ஒரு திட்டம் போட்டுள்ளனர்.
அதன்படி அந்த பெண்ணை தனது வீட்டிற்கு வரவலைத்து உல்லாசம் அனுபவித்துள்ளார் தொழில் அதிபர். மீண்டும் ஒரு முறை மற்றொரு இடத்தில் உல்லாசம் அனுபவித்தபோது, அதனை மறைந்திருந்த காதலன் வீடியோ எடுத்து விட்டார்.
அதனை வைத்து நிறுவன அதிபரை மிரட்டி ரூ. 50 லட்சம் பறித்து, காதலனும் காதலியும் கார், தங்க நகை என ராஜ வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
பிறகு பணம் தீர்ந்த பிறகு மீண்டும் 50 லட்சம் கேட்டு இருவரும் மிரட்டியுள்ளனர். பணம் இல்லாததால் தொழில் அதிபர் காவல்துறையில் தஞ்சம் அடைந்தார்.
இதனையடுத்து போலீசார் காதலன், காதலி ஆகிய இருவரையும் கைது செய்து, 4 கார்கள் 50 பவுன் தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்தச் சம்பவம் காவல்துறை வட்டாரத்தையே உலுக்கியுள்ளது. நான் சிவப்பு மனிதன் படத்தில் வரும் கதை போல உண்மையிலேயே நடந்துள்ளது.