Friday 2 June 2017

இனி விவசாயிகள் மாடுகள் வளர்க்க கூடாது..! ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தடை: ஒரு அதிர்ச்சி தகவல்!



மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தின்படி யாரும் இனி மாடு, காளை, ஒட்ட‌க‌ம் போன்ற‌ கால்நடைகளை உண‌வுக்கு விற்பதற்காக சந்தைக்கு கொண்டு வரக்கூடாது.
அப்ப‌டி கொண்டுவ‌ருவ‌தானால்..கால்நடைகளை விற்பவர் கால்நடை சம்பந்தமான ஆவணங்களில் 5 நகல்கள் வைத்திருக்க வேண்டும்.
முதல் நகல் வாங்குபவரிடமும், 2வது நகல் விற்பவரிடமும், 3வது நகல் வாங்குபவர் குடியிருக்கும் பகுதியின் தாசில்தாரிடமும், 4வது நகல் தலைமை கால்நடை அதிகாரியிடமும், 5வது நகல் கால்நடை விற்பனை கமிட்டியிடம் இருக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதிகளாக்கி மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இவ்வளவு “ந‌டைமுறை சாத்திய‌ம‌ற்ற‌” விதிகளும் எதற்காக? மாடுகளைக் காப்பாற்றுவதற்காகவா?
இல்லை..!. ஒருவரும் நாட்டு மாடுகளை வளர்க்காமல் போகட்டும் என்பதற்காகவே..!
இவ்வளவுக் கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்த பின்னர், இனி எந்த விவசாயியாவது மாடுகளைத் தங்கள் வீடுகளில் வளர்க்கப் பிரியப்படுவார்களா என்ன..?
த‌ன‌க்கும் த‌ன் குடும்ப‌த்துக்குமே உண‌வுக்கு ப‌ற்றாக்குறை இருக்கையில், வ‌ய‌தான‌, உழ‌வுக்கு ப‌ய‌ன‌ற்ற மாட்டுக்கு அவ‌ன் எப்ப‌டி உண‌வ‌ளிப்பான்…? வ‌ய‌தான‌ மாடுக‌ளை விற்கக்கூட‌ முடியாது.
சரி, அப்ப‌டி இந்த‌ அரசுக்கு இவன் மீது என்ன கோபம்? இங்குதான் #ச‌ர்வ‌தேச‌பொருளாதார‌அர‌சிய‌ல் விளையாடுகிற‌து…!
நாட்டுப் பசுக்களை இனி ஒருவனும் வளர்க்கவே ஆசைப்படக்கூடாது.அதற்காகத்தான் இவ்வளவு கட்டுப்பாடுகள்..!
நாளடைவில் நாட்டுப் பசுக்கள் எல்லாம் ஒழிந்து போய், பாலுக்காக வெளிநாட்டுப் பசுக்களான ஜெர்சி இனப் பசுக்களையே நாம் சார்ந்திருக்க வேண்டும்.
1.4 பில்லிய‌ன் ம‌க்க‌ள்தொகை கொண்ட‌ இந்த தேசத்தில் (உணவு, தேநீர், இனிப்பு வகைகள், வெண்ணெய், நெய், தயிர் போன்றவைகளுக்காக) 100 கோடி லிட்டர் பால் தேவை என்று குறைந்த‌ப‌ட்ச‌ம் கணக்கிடுங்கள்.மாதத்திற்கு 3,000 கோடி லிட்டர் பால் தேவைப்ப‌டும்.
ஒரு லிட்டர் பால் 40 ரூபாய் என்றால்கூட‌,மாதத்திற்கு 1,20,000 கோடி ரூபாய் பால் வணிகம்.
அப்படியானால் “வருஷத்துக்கு 14,40,000 கோடி ரூபாய்” வணிகம்..! – இதுதான் அவ‌ர்க‌ள் நோக்க‌ம்.
இதைக் குறி வைத்துதான் அந்நிய சக்திகள் களம் இறங்குகின்றன. அவர்கள் வியாபாரம் இங்கு கொழிக்க வேண்டும். அதற்கு இந்த‌ கார்ப்ப‌ரேட் கைக்கூலி அர‌சு சோர‌ம் போகிற‌து.
ஜெர்சி இன ப‌சுவின் விந்துக்களுக்குக்கூட அவர்கள் காபிரைட் வாங்கி வைத்திருக்கின்றார்கள்.
நம் விருப்பம் போல் அந்த மாடுகளை நாம் இனவிருத்தி செய்து வளர்த்துவிட முடியாது. காசு கொடுத்துதான் அதன் விந்துவைக்கூட வாங்க முடியும்.
பல ஆண்டுகள் கழித்து இந்த தேசம் அதை உணர்ந்து, திருந்தி வரப் பார்க்கும் போது…. மோடியும் இருக்க மாட்டார்.. நாட்டு மாடுகளும் நாட்டில் இருக்காது.
அதன் பிறகு அவன் வைத்ததுதான் இங்கு சட்டம். விவ‌சாய‌த்தோடு சேர்ந்து ஒரு தேச‌த்தின் பெரும் ம‌க்க‌ள் தொகையே அழிந்துவிடும்.
த‌‌ய‌வுசெய்து சிந்தித்து செய‌ல்ப‌டுங்க‌ள். இது வெறும் சிறுபான்மை ம‌ற்றும் த‌லித்துக‌ள் மீதான‌ போர‌ல்ல‌..!
“இது வெறும் ம‌த உணர்வு சார்ந்த‌ விஷ‌ய‌ம‌ல்ல‌.. ஒட்டுமொத்த‌ இந்திய விவ‌சாய‌த்தின் எதிர்கால‌ம்”என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..!
ஒரு விஷயம் இங்கு தெளிவாக உணர்த்துகிறது. இனி விவசாயிகள் யாரும் மாடு வளர்க்க கூடாது என்றும் ஜல்லிக்கட்டிற்கும் நிரந்தரத் தடை என்றும்  நேரிடையாகச் சொல்லாமல் மாடே வளர்க்க  முடியாத நிலைக்கு மதிய அரசு செய்து விட்டது என்கிறார்கள் இயற்களை ஆர்வலர்கள்.
உண்மைதான் பகீர் என்று இருக்கிறது.

No comments: