Saturday 22 July 2017

உடலை இரும்பாக்கும் தமிழக நாட்டு பசும்பால்! குழந்தைகளுக்கு இலவசமாக கிடைக்கிறது!




இந்தியாவின் பிரம்மன் ரக பசுமாடுகளை ஆங்கிலேயர்கள் தங்களது நாட்டிற்கு கொண்டு சென்றனர்.

இன்று அமெரிக்காவில் அதன் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் ஜெர்சி மாடுகளின் பாலையும், பாக்கெட்டுகளில் ரசாயணம் கலந்து விற்கப்படும் பாலையும் குடித்து உடம்பை கெடுத்துக் கொள்கிறோம்.
இதற்கு காரணம் சதி தான். சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள ராஜபாளையம் கிராமத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி பாஸ்கர், அழிவின் விளிம்பில் உள்ள நாட்டு பசு மாடுகளை பாதுகாத்து வளர்த்து வருகிறார்.
ஒரு லிட்டர் பாலை ரூ. 80க்கு விற்று வருகிறார். 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக கொடுத்து வருகிறார்.
இந்த பால் பல்வேறு மருத்துவகுணங்களை கொண்டுள்ளது.
குஜராத்தின் கிர் பகுதி பசு இனத்தில் இருந்தும் ஒரு மாட்டை வளர்த்து வருகிறார்.
இந்த பசுவானது கிர்காடுகளில் உள்ள சிங்கங்களையே கொம்பால் முட்டி வீழ்த்திவிடுமாம்.
ரசாயண பாக்கெட் பால் விலை குறைவு என்பதால், ஏழை எளிய மக்கள் வேறு வழியில்லாமல் வாங்குகின்றனர். இதனை அரசு தான் தடுக்க வேண்டும்.

No comments: