Sunday, 5 November 2017

ஆண்ட்ராய்டில் கூகுள் தேடல்களை அழிப்பது எப்படி?

ஆண்ட்ராய்டில் கூகுள் தேடல்களை அழிப்பது எப்படி?

















புதுடெல்லி:  

உலகின் பிரபல தேடுப்பொறி சேவை வழங்கும் நிறுவனமான கூகுள், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் அதன் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் தேடல்களை சேவை மேம்பாட்டு காரணங்களுக்காக சேமித்து வைக்கும். முன்னதாக கூகுள் சர்ச் செயலியை மேம்படுத்திய கூகுள் உங்களது தேடல்களை ஸ்கிரீன்ஷாட் முறையில் சேமிக்க துவங்கியுள்ளது.

செயலியை திறந்ததும், கடிகாரம் போன்ற ஐகான் திரையின் கீழ் காணப்படும் இதனை கிளிக் செய்ததும், உங்களது தேடல்கள் ஸ்கிரீன்ஷாட் முறையில் சேமிக்கப்பட்டிருப்பதை காண முடியும். 

இந்த செயலி உங்களது அனைத்து தேடல்களையும் காண்பிக்கும். இங்கு வலது புறமாக ஸ்வைப் செய்து, தேடல்களை முழுமையாக பார்க்க முடியும். இந்த அம்சம் சிலருக்கு பயனுள்ளதாக தெரிந்தாலும், சிலர் பயனற்றதாக நினைக்கலாம். அவ்வாறானவர்கள் தங்களது தேடல்களை அழிக்கும் வழிமுறைகளை தொடர்ந்து பார்ப்போம்.

- ஸ்கிரீன்ஷாட்களை அழிக்க கூகுள் செயலியை திறந்து, அதில் காணப்படும் ஹிஸ்ட்ரி ஐகான் கிளிக் செய்ய வேண்டும். இனி உங்களது சாதனத்தில் கடந்த ஏழு நாட்களில் மேற்கொண்ட தேடல்கள் காணப்படும். இதில் ஸ்வைப் செய்து ஸ்கிரீன்ஷாட்களை அழிக்க முடியும்.

- ஸ்கிரீன்ஷாட்களை அழிப்பது மட்டுமின்றி இந்த அம்சத்தையும் முழுமையாக டிசேபிள் செய்ய முடியும்.

- இதை செயல்படுத்த மெயின் ஸ்கிரீன் சென்று இடது புறத்தின் மேலே காண்பிக்கப்படும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும். இனி செட்டிங்ஸ் சென்று அக்கவுண்ட்ஸ் மற்றும் பிரைவசி ஆப்ஷன் செல்ல வேண்டும். இவ்வாறு செய்தபின் மற்றொரு திரையில் காணப்படும் எனேபிள் ரீசன்ட் ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தபின் ஸ்கிரீன்ஷாட்கள் சேமிக்கப்படாது.

ஆண்களை மூட் அவுட் செய்ய பெண்கள் பயன்படுத்தும் சில மந்திரங்கள்!



mood out girls


ஆண்களை மூட் அவுட் செய்ய பெண்கள் பயன்படுத்தும் சில மந்திரங்கள்!

பெண்களை பொறுத்தவரையில் ரகசிங்கள் காப்பது ஒரு வார்த்தையில் பல அர்த்தங்கள் வைத்திருப்பது, மெசேஜ் அனுப்பினால் அதிலும் பல மர்மங்கள் ரகசிங்கள் மறைந்திருக்கும்.
உதாரணத்திற்கு சரி போயிட்டு வா.. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல என்று சொல்வார்கள். ஆனால் நண்பருடன் வெளியே போய்விட்டு மறு படியும் வீடு திரும்பினால் என்னைவிட உனக்கு உன்னோட நண்பர்கள்தான் முக்கியமா போயிட்டாங்களா என்று கேட்பார்கள்.
இது போன்று பெண்கள் ஒரு வார்த்தையில் ஆண்களை குழிதோண்டி புதைத்து விடுவார்கள். அப்படி மூட் அவுட் செய்யும் சில வார்த்தைகள் இதோ.
ம்ம்ம்..!
இந்த வார்த்தையை பொறுத்தவரையில் இன்று வரை பொருளில்லை. ஒரே ஒரு ரியாக்ஷன் அவ்வளவுதான் இதனை கடவுளால் கூட கண்டு பிடிக்க முடியாது.
சும்மாதாங்க ஒண்ணுமில்லை..
இந்த சும்மாதாங்க ஒண்ணுமில்லை என உங்களோட காதலி கூறினால் அதனை சாதாரணமாக விட்டு விடாதீங்க, என்ன பிரச்சனை என்று கேட்டு தெரிந்து கொண்ட பின்னர் அங்கிருந்து செல்லுங்கள். இதில் பல ஆயிரம் பிரச்சனைகள் ஒளிந்து கொண்டிருக்கிறது.
இவ்வளவு நேரமா..
மேக்கப் செய்வதற்கும் பல உடைகளை மாற்றுவதற்கும் பல மணி நேரம் பெண்கள் எடுத்துக்கொள்வார்கள். இதில் ஆண்கள் என்றாவது ஒரு நாள் 5 நிமிடம் எடுத்துக்கொண்டால் ஏன் இப்படி பண்றீங்க உங்களுக்கு சீக்கிரம் ரெடியாக தெரியாதா என்று சொல்வார்கள். அப்போது ஆண்களுக்கு எங்கிருந்துதான் கோபம் வருமா தெரியாது.
மேக்கப் அதிகமா..
பெண்களை பொறுத்தவரையில் மேக்கப் போடுவதற்கு அவர்கள் ஒரு நாள் முழுவதும்கூட எடுத்துக்கொள்வார்கள். அந்த சமயத்தில் ஆண்கள் போய் கேட்டால் மேக்கப் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்றால் உடனே மூஞ்சியை தூக்கி வைத்துகொள்வார்கள்.
இதனால் ஆண்கள் மனைவியிடமோ அல்லது காதலியிடமோ எதையும் கேட்காமல் கண்டும் காணாமல் போய்விடுவதே சிறந்தது.

Thursday, 2 November 2017

இந்த பழக்கங்களை விட்டொழித்தால் மார்பக புற்று நோய் வராது!! மருத்துவர் கூறும் தகவல்கள்!!


இன்றைய காலகட்டத்தில் புற்று நோய் சர்வசாதாரணமாக அனைவரையும் தாக்குகிறது. குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்று நோய் பெருமளவில் பாதிக்கிறது. புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல விதமான முயற்சிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அரசும் எடுத்து வருகிறது. பெண்கள் குறிப்பிட்ட இடைவெளியில் புற்று நோய்க்கான பரிசோதனைகளை எடுத்துக் கொள்வது அவசியம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. 

எட்டு பெண்களில் ஒரு பெண்ணுக்கு புற்று நோய் தாக்க படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. பாரம்பரியம், உடல் நிலை, உடல் எடை போன்றவை இந்த புற்று நோயை அதிகரிக்கும் வாய்ப்பை உண்டாக்குகின்றன. 



These everyday habits may increase your risk of breast cancer

மார்பக புற்று நோயின் அபாயத்தை குறைக்க பல்வேறு முயற்சிகள் செய்யலாம். சில பழக்க வழக்கங்கள் புற்று நோயின் வருகைக்கு காரணமாகவும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் விதமாகவும் இருக்கலாம். அவற்றை அறிந்து அத்தகைய பழக்கத்தை கைவிடும்போது புற்று நோய் வரும் வாய்ப்பு குறையலாம். 

அமெரிக்கன் கேன்சர் நிறுவனம், அறிவியல் சார்ந்த சில வழிமுறைகளையும், சில பழக்க வழக்கங்களை நிறுத்துவதற்கான தகவல்களையும் குறிப்பிடுகின்றன. இவற்றால் மார்பக புற்று நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது.

மது பழக்கம்:

மது பழக்கம்: 


ஆல்கஹால் எடுத்துக் கொள்ளும் அளவை பொறுத்து புற்று நோயின் அபாயம் அதிகரிக்கிறது. மது பழக்கம் முற்றிலும் இல்லாதவர்களை விட தினமும் 1 முறை மது அருந்துபவர்களுக்கு மார்பக புற்று நோயின் அபாயம் அதிகமாக உள்ளது. ஒரு நாளில் 2-3 ட்ரின்க் எடுப்பவர்களுக்கு 20% அதிகரித்த அபாயம் உள்ளது. ஆல்கஹால் , ஈஸ்ட்ரோஜென் மற்றும் மார்பக புற்று நோய் தொடர்பான ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கிறது . 

ஆல்கஹால் அணுக்களில் உள்ள DNA வை சேதப்படுத்துகின்றன. இது புற்று நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆல்கஹால் கலந்த பானங்களை பருக நினைக்கும் பெண்கள் ஒரு நாளைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பானங்களை அருந்த கூடாது என்று அமெரிக்கன் கேன்சர் நிறுவனம் கூறுகின்றது.




 கர்ப்பத்தடை மாத்திரைகள் :

கர்ப்பத்தடை மாத்திரைகள் : 

கருத்தடை மாத்திரைகள், மார்பக புற்று நோயை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. கருத்தடை ஊசிகள் ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒரு முறை பயன்டுத்தப்படுகிறது. இவற்றில் ப்ரோஜெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் ஊசி வழியே செலுத்தப்படுகிறது. 

அமெரிக்கன் கேன்சர் நிறுவனம் , ஹார்மோன்கள் அல்லாத உட்புற கருவிகளை பயன்படுத்த பரிந்துரைக்கிறது. இவற்றை கருத்தடைக்கு பயன்படுத்துவைத்தால் மார்பக புற்று நோயின் அபாயம் குறைகிறது. கருப்பை வாய் புற்று நோயின் அபாயமும் குறைகிறது.

மாத்திரைகள்:

மாத்திரைகள்: 

புற்று நோய் உண்டாகும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் பெண்கள் மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது. டாமோக்சிபன் , ரெலோக்சிபின் போன்ற மருந்துகளை எப்போதும் எடுத்துக் கொள்வது புற்று நோய் அபாயத்தை குறைக்கிறது. இவை மார்பக திசுக்களில் ஈஸ்ட்ரோஜென் செயல்பாடுகளை தடுக்க உதவுகிறது. இதனால் மார்பக புற்று நோய் தடுக்கப்படுகிறது. 

மருந்துகளை எடுத்துக் கொள்வதற்கு முன்னர் அதன் பக்க விளைவுகளை பற்றி தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.


 குழந்தைகள்:


குழந்தைகள்: 

அமெரிக்கன் கேன்சர் நிறுவனம், குழந்தைகள் இல்லாத அல்லது 30 வயதிற்கு மேல் முதல் குழந்தை பெற்று கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்று நோயின் அபாயம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கிறது. 30 வயதிற்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கருத்தரித்து குழந்தை பெற்று கொள்வதால் இதன் அபாயம் குறைக்க படுவதாக தெரிவிக்கின்றனர். 

முதல் குழந்தையை தாமதமாக பெற்று கொள்கிறவர்களுக்கு இளம் வயதில் தாய்மை அடைபவர்களை விட அதிகமான புற்று நோய் தாக்கும் அபாயம் உள்ளது.

இளம் வயதில் அம்மா:

இளம் வயதில் அம்மா: 

இளம் வயதில், சீக்கிரமாக குழந்தை பெற்று கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது. கருத்தரிக்கும் வயதுடன் மார்பக அணுக்களுக்கு தொடர்பு உள்ளது. கருவுறும் காலத்தில் இவை அதிகமாக வளர்ச்சி அடைகிறது. வயது அதிகரிக்கும்போது இந்த அணுக்கள் சேதமடையும் வாய்ப்பு உள்ளது. 

ஆகவே இளமையில் கருவுறும் போது அணுக்களின் சேதம் குறைக்கப்படுகிறது என்றும் இதனால் மார்பக புற்று நோயின் அபாயம் குறைகிறது என்றும் கூறுகின்றனர்.

உடற்பயிற்சி:

உடற்பயிற்சி: 

உடற்பயிற்சி செய்வதால் புற்று நோய் அபாயம் தடுக்கப்படுகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதால் 10-20% மார்பக புற்று நோயை தடுக்க முடிகிறது என்று நடந்து வரும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 

உடற்பயிற்சி செய்வதால் எடை கட்டுப்பாடு ���ற்படுகிறது, ஈஸ்ட்ரோஜென் அளவு குறைகிறது, உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனால் புற்று நோய் அபாயம் குறைகிறது. 

ஒரு வாரத்தில் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி அல்லது 75 நிமிட தீவிர உடற்பயிற்சி செய்யும் பெரியவர்களுக்கு புற்று நோயின் அபாயம் குறைகிறது என்று அமெரிக்கன் கேன்சர் நிறுவனம் தெரிவிக்கிறது.


 தாய்ப்பால்:

 தாய்ப்பால்: 

மார்பக புற்று நோய் தொடர்பான 47 விதமான ஆய்வுகளின் முடிவுகள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு புற்று நோயின் அபாயம் குறைகிறது என்று தெரிவிக்கின்றன. 1 வருடம் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு புற்று நோயின் தாக்கம் குறைகிறது. எல்லா குழந்தைகளுக்கும் சேர்த்து 2 வருடம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் 2 மடங்கு நல்ல பலனை அடைகின்றனர். 

தாய்ப்பால் கொடுப்பதால் மாதவிடாய் காலம் தாமத படுத்தப்படுகிறது. இதனால் வாழ்நாள் முழுதும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் உருவாக்கம் குறைக்கப்படுகிறது. கர்ப்பகாலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் மார்பக திசுக்கள் உதிர்கின்றன. இதனால் DNA சேதம் உள்ள அணுக்கள் வெளியேற்றப்படுகின்றன . இதனால் மார்பக புற்று நோய் தடுக்க படுகிறது.

 மெனோபாஸ்:


மெனோபாஸ்: 

மெனோபாஸ் காலகட்டத்தில் ஹார்மோன் தெரபி எடுத்துக் கொள்வதால் புற்று நோய் தாக்கும் அபாயம் உள்ளது. ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டொரோன் ஆகியவற்றை சேர்த்து எடுத்துக் கொள்வதால் இந்த அபாயம் உண்டாகிறது. இந்த சிகிச்சை எடுத்துக் கொண்டு இதனால் மார்பக புற்று நோய் உண்டாகும்போது இறப்பிற்கான வாய்ப்பும் உண்டு.

ஹார்மோன் சிகிச்சை :



ஹார்மோன் சிகிச்சை : 

2 வருடங்கள் தொடர்ந்து இந்த ஹார்மோன் சிகிச்சையை பயன்படுத்துவதால் புற்று நோய் இருப்பதை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு, மிகவும் முற்றிய நிலையில் அதனை கண்டுபிடிக்கும் அபாயம் உள்ளது. 

சமீபமாக அல்லது தற்போது இந்த ஹார்மோன் சிகிச்சையை எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்த அபாயம் அதிகமாக உள்ளது. இத்தகைய சிகிச்சையை கைவிட்டு 5 வருடங்கள் ஆன பிறகு புற்று நோயின் தாக்கம் குறைகிறது. 

தீர்வு :


தீர்வு : 

மார்பக புற்று நோய் என்பது குணப்படுத்த முடியாத நோய் இல்லை. ஆரம்பத்தில் இதனை கண்டறிந்து சரியான மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும். நல்ல பழக்க வழக்கங்கள் கொண்டு ஆரோக்கியமாக இருப்பது என்றும் நல்ல வளமான மற்றும் சிறப்பான வாழ்வை தரும்.

Tuesday, 24 October 2017

உறவில் துணையை ஏமாற்ற பெண்கள் கூறும் 13 சாக்குப்போக்குகள்!



"Whisper" எனும் சாட்டிங், ஃப்ளர்டிங் செய்யும் செயலியில் தங்கள் துணையை ஏமாற்றுவது குறித்து பெருமிதமாக பெண்கள் கூறிய சில ஒப்புதல் கூற்றுகள் கொஞ்சம் தூக்கிவாரிப் போடும்படியாக தான் இருக்கிறது. நமது சமூகத்தில் மட்டுமல்ல, உலகின் பெரும்பாலான சமூகங்களில் ஆண்கள், செய்யும் அதே தவறை பெண்கள் செய்யும் போது அதன் தாக்கம் பன்மடங்கு பெரிதாக தான் காணப்படுகிறது. 

புகை, மது போல துணையை ஏமாற்றுவதிலும் இந்த தாக்கத்தை நாம் வெகுவாக காண முடிகிறது. ஓர் தான் துணையை ஏமாற்றுவது பெரும்பாலும் நான்கு சுவர்களுள் முடிந்து விடும். அதுவே பெண்ணாக இருந்தால், பெரும்பாலும் ஒன்று அவளது உயிர் பிரியும் அல்லது அந்த உறவு பிரியும். 

 உறவுகளில் அதிகம் ஏமாற்றுபவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற கேள்விக்கு 50:50 என்பது தான் பதில். யார் ஒருவரும் வேண்டுமென்றே துணையை ஏமாற்றுவதில்லை. ஏதோ ஒரு காரணம், உறவில் அவருக்கு கிடைக்காத ஒன்று, வேறுபக்கம் மிகுதியாக கிடைக்கும் போது, அவர்கள் ஏமாற்ற துணிகிறார்கள். இதோ! தங்கள் துணையை ஏமாற்றியது குறித்து சில பெண்கள் பெருமிதமாக கூறிய பதிவுகள்...

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்...


  வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்...

 "நான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என் கணவரை ஏமாற்றுவேன். ஏனென்று எல்லாம் தெரியவில்லை, ஆனால், திருமணத்திற்கு பிறகு வேறு நபருடன் உறவில் ஈடுபடுவது என்னை ஊந்துகிறது..." காரணம்: புகை, மது போல செக்ஸ் என்பது ஒரு வகையிலான அடிக்ஷன் தான். ஒருவேளை அவரது செக்ஸ் ஆசைகள் துணையால் தீர்த்து வைக்க முடியவில்லை, அல்லது தீரவில்லை எனில், அவர் நிச்சயம் வேறு நபரை தேட தான் செய்வார். இந்த அடிக்ஷன் புகை, மதுவை விட கொடியது. 

 வருந்தவில்லை... 

"நான் எனது காதலனை ஏமாற்றினேன். ஏனெனில், என் காதலனுக்கு என் மீது அக்கறையே இல்லை. அது ஒரு சிறந்த இரவாக (அனுபவமாக) அமைந்தது. அந்த செயலுக்காக நான் எப்போதும் வருந்தவில்லை." காரணம்: பெண்கள் ஓர் ஆணிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பது மன ரீதியான நெருக்கத்தை தான். நீங்கள் தொலைதூரம் தாண்டி இருப்பினும். உங்கள் வார்த்தைகள் அவர்களுக்கு அந்த அன்பை கொடுத்தாலும் போதும், பெண்கள் உங்களை ஏமாற்ற முனைய மாட்டார்கள்.

 சுவாரஸ்யம்!

 "என்னால் என் துணையை ஏமாற்றுவதை நிறுத்த முடியாது. நான் இதை விரும்புகிறேன். இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இது தான் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது." காரணம்: இதுவும் செக்ஸ் அடிக்ஷனின் வெளிபாடு தான். இதற்கு கவுன்சிலிங் தான் அளிக்க வேண்டும். இளம் வயதில் சுவாரஸ்யமாக இருக்கும், சில காலங்களுக்கு பிறகு ஒவ்வொரு நாளும் இதை எண்ணி எண்ணி வருந்த வைக்கும். 

 ஜஸ்ட் ஃபார் ஃபன்!

 "எனக்கு ஒரு காதலன் இருக்கிறான். அவனுக்கு பின்னால் தொடர்ந்து நான் ஏமாற்றி வருகிறேன். இதை எண்ணி நான் தவறாக உணரவே இல்லை. நான் எனது இளமை பருவத்தை அனுபவிக்கிறேன். ஜஸ்ட் ஃபார் ஃபன்." காரணம்: இது பெண்களிடம் மட்டுமல்ல, ஆண்களிடமும் அதிகம் காணப்படுகிறது. வயதிருக்கிறது என ஆடுவார்கள். வயதான பிறகு தான் நாம் செய்தது எவ்வளவு பெரிய தவறு என தெரியும். இவர்கள் சூடுபட்டு திருந்தும் பூனைகளாக மாறுவார்கள்.

 போரிங்...

 "நான் எனது கணவனை ஏமாற்றுகிறேன். நான் இதை தொடர விரும்புகிறேன். காரணம், எனது கணவர் எப்போதும் போராக செயல்படுகிறார்..." காரணம்: ஒரு சில நேரங்களில் துணை ஏமாற்றும் செயலில் ஈடுபட கணவர்களே காரணமாகிவிடுகிறார்கள். வெறும் பணம், வீடு, நகை மட்டுமே துணையை திருப்திப்படுத்திவிடாது. உங்கள் அரவணைப்பு, கொஞ்சல்களும் தேவைப்படும். ஆண்கள் இதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

செக்ஸ்!

 "நான் கடைசியாக என் காதலனை ஏமாற்றினேன். என்னால் இனிமேலும், அவரது குறைந்தளவிலான செக்ஸ் ஈடுபாட்டை கையாள முடியாது. நான் ஏமாற்றிய போது கொண்ட உறவே சிறந்ததாக இருந்தது. இதற்காக நான் வருந்தவில்லை." காரணம்: செக்ஸ் எனது அனைத்து உயிரினங்கள் மத்தியிலும் இருக்கும் இயற்கையான செயற்பாடு. இந்த காலத்தில் ஆண்மை குறைபாடு என்பது பலர் மத்தியில் இருக்கிறது. செக்ஸ் தான் வேண்டும் என்றால், அதற்கு காதல் என்ற பெயர் சூட்ட வேண்டாம்

 சிறையில் இருந்த போது...

 "என் கணவர் சிறையில் இருந்த போது, நான் அவரை ஏமாற்றினேன். நான் அப்போதைய ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்தேன். நான், அவர் இதை கண்டுபிடிக்க முடியாது என கருதினேன். நான் என் கணவரை விரும்புகிறேன். ஆனால், மற்ற ஆண்கள் படுக்கையில் சிறப்பாக இருக்கிறார்கள்." காரணம்: கட்டுப்பாடு இருக்கும் பட்சத்தில் தவிர்க்கலாம் ஆயினும், இது போன்ற சூழல்களை தவிர்ப்பது கடினம்.

 தோழியுடன்...

 "நான் எனது காதலனை ஏமாற்றினேன். ஆனால், நான் எனது நெருங்கிய தோழியுடன் தான் உறவு கொண்டேன். நாங்கள் இருவரும் பெண்கள் என்பதால் எனக்கு பெரிதாக எந்த வருத்தமும் இல்லை. " காரணம்: பை-செக்சுவல் நபராக இருப்பின், அவர்களால் இதை தவிர்க்க முடியாது. சிலர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவர். சிலர், ஆண்களுடனும், பெண்களுடனும் என இருபாலருடனும் உறவில் ஈடுபடுவார்கள். 

 பெஸ்ட் பிரெண்ட்! 

"கடந்த இரவை நான் எனது கணவரை ஏமாற்றி, எனது நெருங்கிய தோழியுடன் கழித்தேன். கடந்த பத்து வருடங்களாக என் கணவரால் திருப்தி செய்ய முடியாததை, எனது தோழி செய்தால். நான் முழுமையாக அதை அனுபவித்தேன்." காரணம்: சில ஆண்கள் ஃபோர் ப்ளேவில் ஈடுபட தவிர்ப்பார்கள். ஆண்களுக்கு இருப்பது போலவே, பெண்களுக்கும் சில ஆசைகள் இருக்கும். அதை ஆண்கள் செய்ய தவறும் போது, பெண்களே இவ்வாறான உறவில் இணைவது அதிகரிக்கிறது.


 என் தோழிகளும்...

 "நான் எனது கணவரை ஏமாற்றிவிட்டு, வேறொரு ஈர்ப்பான ஆணுடன் உறவு கொண்டேன். ஏனெனில், எனது தோழிகள் அனைவரும் இதை செய்கிறார்கள்." காரணம்: அவர் செய்கிறார் என தானும் செய்வேன் என்பது தவறு. சோசியலிசம், மேற்கத்தியம் என போலி சாயம் பூசிக் கொண்டு சிலர் இவ்வாறு ஈடுபடுவதை நியாப்படுதுவதை ஏற்க முடியாது. 

 திருமண நாளில்... 


"நான் எங்கள் திருமண நாளில் என் கணவரை ஏமாற்றிவிட்டு, அவரது நெருங்கிய தோழருடன் உறவு கொண்டேன். நான் இதற்கு வருந்த வேண்டும். ஆனால், நான் கொண்டதிலேயே சிறந்த உறவு அதுதான்." 

 என் கணவரால் தான்...

"என் கணவர் ஒவ்வொரு முறையும் என்னை வெறுபேற்றும் போதும், நான் அவரை அதிகமாக ஏமாற்ற காரணங்கள் கிடைக்கின்றன." காரணம்: சில சமயங்களில் கணவனின் கோபமே, துணை அவரை ஏமாற்ற காரணமாகிவிடும். இதை ஆண்கள் தவிர்க்க வேண்டும்.

 திருமணத்திற்கு முன்...

 "நான் திருமணத்திற்கு முன், என் வருங்கால கணவரை ஏமாற்றினேன். எனது பாஸுடன் உறவு கொண்டேன். நான் சிறிது காலம் காதலில் இருந்தேன்."

பில்லி சூனிய பொம்மைகள் பற்றி உங்களுக்குத் தெரியாத சில சுவாரஸ்ய விஷயங்கள்!

நாம் இதுவரை பில்லி சூனிய மாந்திரீகத்தைப் பற்றி திரைப்படங்களில் தான் பார்த்திருப்போம். இது ஒருவருக்கு கேடு விளைவிக்க செய்யும் தீய செயலாகும். இது மிகவும் பயங்கரமாக இருக்கும். என்ன தான் இது ஒரு மூடநம்பிக்கையாக இருந்தாலும், நம்மில் பலருக்கும் இதன் மேல் ஒரு நம்பிக்கை உண்டு

Shocking Things About Voodoo Witchcraft That You Should Know

பில்லி சூனியம் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒரு மதம். பேகன் காலம் வரை இந்த மதம் இருந்தது. நாளடைவில், அது மாற்றமடைந்து, தற்போது இந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மாந்திரீகத்தை கற்றுக் கொண்டு, ஒருவருக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவர்களாக கருதப்படுகிறார்கள். பில்லி சூனியம் மாந்திரீகத்தில் பொம்மைகள் மூலம் எதிரிகளை பழி வாங்குவது தான் வழக்கம். இக்கட்டுரையில் பில்லி சூனிய பொம்மைகள் குறித்த சில சுவாரஸ்ய விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


விஷயம் #1 

பில்லி சூனிய மாந்திரீகத்தில் பொம்மைகள் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக நம்பப்படுகிறது. இந்த பொம்மையைக் கொண்டு எதிரிகளை அழிப்பார்களாம். 

விஷயம் #2 

பில்லி சூனிய பொம்மைகளானது யாரைக் குறி வைக்கிறோமோ, அவர்களது நகம், தலைமுடி, உடுத்திய துணி அல்லது இரத்தம் கொண்டு மாந்திரீகவாதிகள் செய்வார்களாம். இதனால் எதிரியின் ஆத்மா எளிதில் கட்டுப்படுத்தப்பட்டு, நாம் நினைப்பதை செய்ய முடியுமாம். 

விஷயம் #3 

பில்லி சூனிய சடங்கு ஆரம்பித்த பின், பொம்மைக்கு உயிருள்ள ஒரு விலங்கின் இதயத்தை எடுத்து பொம்மையினுள் வைக்கப்படும். இப்படி செய்வதால், பொம்மை உயிர் பெற்று, பின் அது எதிரியின் ஆத்மாவுடன் இணைக்கப்பட்டு, எதிரியை துன்புறுத்த உதவுமாம். 

விஷயம் #4 

பொம்மை எதிரியின் ஆத்மாவுடன் இணைந்த பின், 1/2 இன்ச் நீளமுள்ள ஊசியை, பொம்மையின் உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் துளையிடுவார்களாம். 

விஷயம் #5 

பில்லி சூனியத்தால் குறி வைக்கப்பட்ட எதிரி, எவ்வளவு மைல் தொலைவில் இருந்தாலும், 28 நாட்களுக்குள் அழிவை சந்திப்பார்களாம். 


விஷயம் #6 

பில்லி சூனிய பொம்மைகள் ஒருவரை அழிக்க மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. உடலில் உள்ள நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுமாம். 


விஷயம் #7 

உலகிலேயே ஆசிய கண்டத்தில் உள்ள சீனா, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற பகுதிகளில் இந்த பில்லி சூனியம் இன்றும் வழக்கத்தில் உள்ளது.

Friday, 6 October 2017

காந்தி கொலையை மீண்டும் விசாரிக்க கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்திற்கு உதவ மூத்த வழக்கறிஞர் நியமனம்


அபினவ் பாரத் அமைப்பின் அறங்காவலரும், ஆய்வாளருமான பங்கஜ் பத்னிஸ் மும்பை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு பொதுநல வழக்கு தொடர்ந்தார். தேசப்பிதா மகாத்மா காந்தி கொலை மற்றும் அதன் பின்னணியில் சதி உள்ளதாகவும், அதுகுறித்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் தனது வழக்கு மனுவில் அவர் கூறியிருந்தார். 

‘மகாத்மா காந்தி கொலை குறித்து விசாரித்த ஜே.எல். கபூர் கமிஷன், காந்தி கொலையின் பின்னணியில் உள்ள ஒட்டுமொத்த சதியையும் வெளிக்கொண்டு வரவில்லை. மகாத்மா காந்தியை நோக்கி கோட்சே சுட்டது மூன்று குண்டுகள்தான் என்று விசாரணை அறிக்கையில் உள்ளது. ஆனால், அவர் உடலில் 4 குண்டுகள் பாய்ந்திருந்தது தெரியவந்துள்ளது. எனவே, நான்காவது குண்டு யாரால் சுடப்பட்டது என்பது குறித்து விசாரித்து கண்டறியப்பட வேண்டும்’ என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பத்னிஸ் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கு நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, எல்.நாகேஸ்வர ராவ் ஆகியார் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. 

விசாரணையின்போது, காந்தியை சுட்டதில் மற்றொரு நபரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என மனுதாரர் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘நாங்கள் அரசியலுக்குள் போக விரும்பவில்லை, சட்டப்படி போகவே விரும்புகிறோம். இப்போது ஏன் மறுவிசாரணை செய்ய வேண்டும் என்பதற்கான வலுவான காரணங்களை தெரிவிக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர். 

அப்போது வழக்கிற்கு வலு சேர்க்கும் வகையில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு போதிய அவகாசம் அளிக்க வேண்டும் என்று மனுதாரர் தெரிவித்தார். 

இவ்வாறு சுமார் 15 நிமிடங்கள் நடந்த வாதத்தின் முடிவில், இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவி செய்யும்படி மூத்த வழக்கறிஞரும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான அமரேந்தர் சரணிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.  

அப்போது நீதிமன்ற அறையில் இருந்த அமரேந்தர் சரண், நீதிமன்றத்திற்கு உதவி செய்வதாக கூறினார். அத்துடன், மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களை படித்துப் பார்க்க போதிய அவகாசம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 30-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Sunday, 1 October 2017

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டன். யாரும் இந்த தவறை செய்யாதீர்கள். விழிப்புணர்வு

ரஷ்ய பெண்மணி (வேரா) தனது கடுமையான உணவுக்கட்டுப்பாட்டால் அவளது உடல்நிலையை மோசமானது. இதனால் அவர் பல மடங்கு தனது உடல் எடையை இழந்துள்ளார்.




18 வயதான பெண் மோசமான நிலையில் இருந்து எப்படி மீண்டு வந்தார் . இப்போது ஒரு உடற்பயிற்சி பயிற்றுநராக உள்ளார் வேரா.



தீடிர் என்று அவரது உடல் 30 கிலோ குறைந்தது. பின்னர் பல வித பயிற்சிகளை செய்து தன்னை மீண்டு எடுத்துள்ளார்.
தான் உண்ண உணவுகள் தான் அவருடைய எடைஇழப்பிற்கு காரணம் என தெரிந்து கொண்ட அந்த பெண்மணி.
உடற்பயிற்சியின் நடைமுறைகளை உடனடியாகக் கழற்றிவிட்டு தசைகளை கட்டியெழுப்பி, உடலை நேசிக்கத் தொடங்கினார்.
ஜிம்மில் வேலை செய்வதற்குப் பதிலாக, வேரா தனது உணவை மிகவும் தேவைக்கு ஏற்ப மாற்றினார், மேலும் பச்சை காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிட ஆரம்பித்தார்.

அவர் இப்போது ஒரு உடற்பயிற்சி பயிற்சியாளராக வேலைக்கு வந்திருக்கிறார்.
ஏறக்குறைய அவரது எடை இருமடங்கு உயர்ந்துவிட்டது இப்போது,
வேராவின் இந்த ஊக்கத்தினால் அவரது ஆதரவாளர்களால் இப்போது 22,000 க்கும் அதிகமானனோர் இஸ்டாகிராமில் தொடருகின்றனர்.