Saturday, 10 March 2018

சாதத்திற்கு அருமையான நண்டு வறுவல்

சாதத்திற்கு அருமையான நண்டு வறுவல்

















தேவையான பொருட்கள் :
நண்டு - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 2
மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 மஞ்சள்  தூள் - சிறிதளவு

வதக்கி அரைக்க:

பூண்டு பல் - 10
மிளகு - 2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு



செய்முறை :

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிது எண்ணெயில் வதக்கி ஆறவைத்து நைசாக அரைத்து கொள்ளவும்.

நண்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, வெங்காயம் போட்டு சிவக்க வதக்குங்கள். 

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்த மசாலா, மிளகாய்த்  தூள்,  மஞ்சள் தூள், உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள். 

அடுத்து அதில் நண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். நண்டு வெந்து, மசாலா கெட்டியாகி நண்டுடன் சேர்ந்ததும் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

சூப்பரான நண்டு வறுவல் ரெடி.


Monday, 5 March 2018

உடலுக்கு வலுசேர்க்கும் மட்டன் எலும்பு சூப்

உடலுக்கு வலுசேர்க்கும் மட்டன் எலும்பு சூப்

















தேவையான பொருட்கள் :
 
ஆட்டு எலும்பு - 1/2 கிலோ
தக்காளி - 1/4 கிலோ
வெங்காயம் - 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு  விழுது - 10 கிராம்
 மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
 மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
 மஞ்சள் தூள் - சிறிதளவு
 தனியாத்தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு  - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு


 
செய்முறை :

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஆட்டு எலும்பை நன்றாக சுத்தம் ஒன்றும் பாதியாக நசுக்கி வைக்கவும். 
 
கடாயில் 1/2 டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி சுத்தம் செய்த ஆட்டு எலும்புகளை சேர்க்கவும்.
 
அடுத்து அதில் மிளகாய் தூள், தனியாத் தூள், மஞ்சத்தூள்உப்பு சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தண்ணீர் 5 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்து தேவையான அளவு வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
 
சுவைப்பார்த்து அதற்கேற்றவாறு மிளகுத்தூள், உப்பு தூள் சேர்த்து கொள்ளலாம்.
 
சுவைக்க சுவையான மட்டன் எலும்பு சூப் தயார்.



ஷோபா முதல் ஸ்ரீதேவி வரை - திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்



















கனவு கன்னிகளாக கோலோச்சிய நடிகைகள் திடீரென்று மரணத்தை தழுவி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்யும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

சிலர் தற்கொலை செய்துகொண்டனர். இன்னும் சிலரது இறப்புகள் தற்போதைய ஸ்ரீதேவியின் மரணம் போலவே மர்மங்கள் நிறைந்ததாக இருக்கிறது.

ஸ்ரீதேவி துபாய் ஓட்டலில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என்று முதலில் கூறப்பட்டது. பிரேத பரிசோதனையில் குளியலறை தொட்டிக்குள் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி மரணம் அடைந்துள்ளார் என்றும் உடலில் அவர் மது அருந்தி இருந்ததற்கான தடயங்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஸ்ரீதேவியின் மரணத்தில் திருப்பங்கள் ஏற்பட்டு துபாய் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

‘பசி’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி 17 வயதிலேயே தேசிய விருதை பெற்றவர் ஷோபா. பின்னர் டைரக்டர் பாலுமகேந்திராவை திருமணம் செய்துகொண்டார். சில மாதங்களிலேயே ஷோபா தற்கொலை செய்து திரையுலகை அதிர வைத்தார்.

நடிகை திவ்யபாரதியின் மரணம் மர்மம் நிறைந்தது. 1990-ல் நிலாப்பெண்ணே என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு-இந்தி படங்களில் நடித்துக்கொண்டிருந்த அவர் தனது 19-வது வயதில் மர்மமாக இறந்துபோனார். நள்ளிரவு 12 மணிக்கு தனது குடியிருப்பின் பால்கனியில் இருந்து தவறி விழுந்து அவர் இறந்துப்போனதாக கூறப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது.

திவ்யபாரதி தற்கொலை செய்துகொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா? தவறி விழுந்து இறந்தாரா? என்றெல்லாம் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இறுதியில் தற்கொலை என்று வழக்கை முடித்தனர்.

கங்கை அமரனின் கோழி கூவுது படத்தில் அறிமுகமானவர் விஜி. விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்து இருந்தார். 2000-ம் ஆண்டில் அவர் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். காதல் தோல்வியில் தூக்கில் தொங்கி இறந்ததாக கூறப்பட்டது.


தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகை கவர்ச்சியால் கலக்கிய நடிகை சில்க் சுமிதா 1996-ல் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார். இவரும் தூக்கில் தொங்கி உயிரை விட்டார்.

பத்ரி படத்தில் விஜய்யுடன் நடித்த மோனல் 2002-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் காதல் தோல்வியால் உயிரை விட்டதாக கூறப்பட்டது. மோனல் நடிகை சிம்ரனின் தங்கை ஆவார்.

அவள் ஒரு தொடர்கதை படத்தில் ‘அடி என்னடி உலகம் அதில் எத்தனை கலகம்’ என்று பாடி ரசிகர்களை கவர்ந்தவர் படாபட் ஜெயலட்சுமி. நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய்மணக்கும் கத்தரிக்கா என்று அவர் பாடிய பாடலும் பிரபலம். முன்னணி நடிகையாக வளர்ந்த அவர் திடீரென்று தற்கொலை செய்துகொண்டார்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள பிரதியுஷா விஷம் குடித்து இறந்தார். நகைச்சுவை நடிகை சோபனா மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார்.

தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ள மயூரி வாழ்க்கையில் வெறுப்படைந்து விட்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கி இறந்தார்.

நடிகை சபர்ணா சென்னை மதுரவாயலில் உள்ள வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

ராம்கோபால் வர்மாவின் நிசப்த் படத்தில் கதாநாயகியாக நடித்து இந்தி பட உலகில் பிரபலமாக இருந்த ஜியாகான் தூக்கில் தொங்கி இறந்தார். அவரை காதலர் கொலை செய்துவிட்டதாக உறவினர்கள் புகார் கூறினார்கள். 

Friday, 2 March 2018

குண்டான பெண்கள் ஆடையை தேர்வு செய்வது எப்படி?

குண்டான பெண்கள் ஆடையை தேர்வு செய்வது எப்படி?

















எந்த ஆடையும் தனக்குப் பொருத்தமாக இல்லையே என்ற கவலை உடல் எடை அதிகமாக இருக்கும் பெண்களுக்கு உண்டு. பருமனாக இருக்கும் பெண்கள் ஆடைத் தேர்வில் கடைப்பிடிக்க வேண்டியவற்றை இங்கே பார்க்கலாம்.

உடம்புடன் ஒட்டிக்கொள்கிற மாதிரியான மெட்டீரியலில் ஆடை அணியக் கூடாது. அவை உடம்பின் ஒவ்வொரு வளைவிலும் ஒட்டிக்கொண்டு, உடம்பு ஷேப்லெஸ்ஸாக இருப்பதைக் காட்டிக்கொடுத்துவிடும். அந்த மாதிரி மெட்டீரியல்தான் வேண்டும் என்றால் அதை வாங்குவதற்கு முன் டிரையல் செய்து பாருங்கள். ஓரளவுக்குப் பொருந்தியிருந்தால் மட்டுமே வாங்குங்கள்.

பொதுவாக உடையின் அளவு கச்சிதமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். பருமனாக இருப்பவர்கள் ஓரளவு தளர்வாக உடையணிவதில் தவறில்லை. அதற்காகத் தொளதொளவென சாக்குப்பை மாதிரி உடை அணிவது தவறு. இன்னும் சிலர் சரியான அளவில் உடையணிவதாக நினைத்துக்கொண்டு மூச்சுவிடக்கூட முடியாத அளவுக்கு இறுக்கமாக உடை அணிவார்கள். இதுவும் தவறு.

உடைகளின் நிறங்களுக்கும் நம் தோற்றத்துக்கும் தொடர்பு இருக்கிறது. கண்களைக் கூசச்செய்கிற பளிச் நிறங்களில் ஆடைகளை அணியக் கூடாது. காரணம், அவை உங்கள் தோற்றத்தை இன்னும் பெரியதாக்கிக் காட்டும். அதனால் எப்போதும் வெளிர் நிறங்களையே தேர்ந்தெடுங்கள்.



ஜீன்ஸ் அணிவதாக இருந்தால் எந்த மாடலில் அணிகிறீர்கள் என்பதும் அவசியம். முழங்காலுக்குக் கீழே கட் வருகிற ஜீன்ஸைத் தவிர்ப்பது நல்லது. இந்த மாடலை அணியும்போது கால்கள் குட்டையாகவும் குண்டாகவும் இருப்பதுபோல் தெரியும். உடல் பருமனைக் காட்டிக்கொடுத்துவிடும் என்பதால் ஜீன்ஸ் விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எந்த மாடலை அணிவதாக இருந்தாலும், அது உங்களுக்கு இணக்கமாவும் பொருத்தமாகவும் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள்.

ஜீன்ஸுக்கு மேட்ச்சிங்காக ஹால்டர் டைப் டாப்ஸ் அணிவது நன்றாக இருக்கும்தான். ஆனால், அது உங்கள் தோற்றத்தை மேலும் பெரியதாக்கிக் காட்டும். இந்த டைப் டாப்ஸ்கள், வயிறு மற்றும் இடுப்புப் பகுதிகளில் உள்ள அதிகப்படியான சதையைத் தனித்துக்காட்டிவிடும் என்பதால் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

உங்கள் டிரெஸ்ஸுக்குப் பொருத்தம் இல்லாத நகைகளை அணிவதும் தவறு. எளிமையான நகை தேர்வு, உங்கள் தோற்றத்தை எடுப்பாகக் காட்டும். கால்களில் பெரிய கொலுசு அணிவதையும் பெரிய வளையங்களைக் கம்மலாக அணிவதையும் தவிர்த்தால், எத்தனை பெரிய கூட்டத்திலும் நீங்கள் தனித்துத் தெரிவீர்கள்!

தோசைக்கு அருமையான தக்காளி பூண்டு கார சட்னி

தோசைக்கு அருமையான தக்காளி பூண்டு கார சட்னி

















தேவையான பொருட்கள் :

தக்காளி - 5 
சிவப்பு மிளகாய் - 8 முதல் 10 வரை
பூண்டு - 12 பல்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கு
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க



செய்முறை :

தக்காளியை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் காய்ந்த மிளகாயை போட்டு வறுக்கவும்.

அடுத்து பூண்டு, தக்காளியை சேர்த்து வதக்கவும்.

வறுத்த பொருட்கள் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெண் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த அரைத்த சட்டியில் கொட்டி கலந்து பரிமாறவும்.

சூப்பரான தக்காளி பூண்டு கார சட்னி ரெடி.

உங்கள் கணவரை தவறான உறவில் இணையாமல் தடுக்கும் வழிகள்

உங்கள் கணவரை தவறான உறவில் இணையாமல் தடுக்கும் வழிகள்

















கணவன் - மனைவி உறவுகளில் கணவன் அல்லது மனைவி தங்கள் துணையை விட்டு வேறு நபரை நாட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அந்த பிரச்சனைகள் என்னவென்று தெரிந்து கொண்டாலே ஆண்கள் மற்ற பெண்களை தேடிப்போகாமல் தடுக்க முடியும்.

கணவன் மனைவி இருவருக்குள்ளும் எந்த ஒரு விஷயத்திலும் தெளிவான, ஒளிவுமறைவு இல்லாத கம்யூனிகேஷன் இருக்க வேண்டும். தெளிவாக பேச வேண்டும், உண்மையை பேச வேண்டும். ஒருவருக்கு ஒருவர் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும்

உங்கள் துணை மீது உள்ள ஆர்வத்தை குறைத்து கொள்ளாதீர்கள். ஆசையை வெளிப்படுத்துதல், கொஞ்சுதல், விளையாட்டாக நடந்துக் கொள்வது என உங்கள் துணை மீதான ஆர்வத்தை வெளிப்படுத்த மறக்க வேண்டாம், மறுக்க வேண்டாம்.



உடலுறவு என்பது அவசியமானது தான். ஆனால் துணையாக இருந்தாலும் விருப்பதுடன் இணைவது தான் இனிமை. சரியான நேரங்களில் இருவரின் புரிதலுடன் இணைவது தாம்பத்தியம் சிறக்க உதவும். தாம்பத்தியத்தில் இருவருக்குள்ளும் புரிதல் இருப்பது மிகவும் அவசியமானது.

உங்களின் உணர்வுகளை கணவரிடம் வெளிப்படுத்த தயங்க வேண்டாம். கோபத்தை கொட்டுவது போல, மகிழ்ச்சி, அழுகை என அனைத்தையும் வெளிப்படையாக காட்டுங்கள். இது தான் உங்கள் இருவர் மத்தியிலான நெருக்கத்தை அதிகப்படுத்தும் கருவி.

எந்த ஒரு செயலாக இருப்பினும் அதை தைரியமாக செய்யுங்கள். வேலையாக இருந்தாலும் சரி, இல்லறமாக இருந்தாலும் சரி, தைரியம் தான் உங்களை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும். இந்த 7 விஷயங்களை நீங்கள் சரியாக, சீராக கடைபிடித்து வந்தால் உங்கள் இல்லறம் என்றும் நல்லறமாக சிறக்கும்.

குழந்தைகள் வாந்தி எடுப்பதற்கான காரணங்களும் சிகிச்சைகளும்

குழந்தைகள் வாந்தி எடுப்பதற்கான காரணங்களும் சிகிச்சைகளும்

















பல காரணங்களால் வாந்தி வரும். அவற்றில் சில உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக்கூடியவை. வாந்தி எடுப்பதற்கு காரணம் குடல் பாகம் இல்லாதிருத்தல், குடல் இடம் மாற்றம், வால்வுகள், ரத்தத்தில் நோய்க் கிருமிகள், மூளைக்காய்ச்சல், மூச்சுத் திணறல், மூளையின் நீர் அதிகமாதல், தவறான முறையில் பால் புகட்டுதல் போன்ற காரணத்தால் சிறு குழந்தைகளுக்கு வாந்தி ஏற்படுகிறது 

ஒரு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் வாந்தி எடுப்பதற்கு காரணம் தவறான முறையில் பால் புகட்டுதல், அதிகப்பால் கொடுத்தல், பிறப்பிலேயே குடல் வீங்கி அடைத்துக் கொள்ளுதல், பேதி, மூளையில் கிருமிகள் தாக்கம், மூளையில் ரத்தக்கட்டு, மூளையில் நீர் அதிகமாதல், மாட்டுப்பால் அலர்ஜி

மனநிலை பாதிப்பு, சிறுநீரில் கிருமி, மஞ்சள் காமாலை, நீரிழிவு நோய், நிமோனியா காய்ச்சல், குடல் அடைப்பு போன்ற காரணத்தால் சிறுவர்கள் வாந்தி எடுப்பதுண்டு.

நிறைய குழந்தைகள் சாதாரணமாகவே சிறு சிறு காரணங்களுக்காக வாந்தி எடுப்பார்கள். அதனால் பயப்பட வேண்டாம். சர்க்கரை - உப்புக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்தால் போதும். சில குழந்தைகள் வாந்தி எடுத்தாலும், அவற்றின் உடல் எடை மற்றும் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். அத்தகைய குழந்தைகளுக்குச் சிகிச்சை தேவையில்லை.

அடிக்கடி வாந்தியோ, தொடர் வாந்தியோ இருந்தால், அவற்றுடன் வேறு நோய்கள் ஏதாவது இருந்தாலும், குழந்தையை உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து சாயான சிகிச்சை அளிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பெற்றோர்கள் தாமாகவே சிகிச்சை அளிக்கவோ, வீட்டில் இருக்கும் மருந்துகளைக் கொடுக்கவே கூடாது. அதனால், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்.